Dericip Tablet Uses in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உடலில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், மாத்திரை மருந்துகளை எடுத்து கொள்ள மாட்டார்கள். வீட்டு வைத்தியம் மூலமாகவே பிரச்சனையை சரி செய்து விடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் சின்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி, பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி மாத்திரை, மருந்துகளை தான் எடுத்து கொள்கிறார்கள். இதனால் உடலில் உள்ள பிரச்சனையை சரி செய்ய முடியும்.
ஆனால் இந்த மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை சரி செய்ய முடியாது. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Dericip மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Dericip Tablet Uses:
டெரிசிப் ரிடார்ட் மாத்திரையானது ஆஸ்துமா அல்லது நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயுடன் (சிஓபிடி) பிரச்சனையை சரி செய்ய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரை சாப்பிடுவதால் தசைகளை லேசாக்கி நுரையீரலின் காற்று பாதையை விரிவுபடுத்தி சுவாசத்தை எளிதாக மாற்றுகிறது.
பக்க விளைவுகள்:
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- வயிற்றுவலி
- தலைவலி
- மயக்கம்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் உங்களுக்கு தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்.
Zynol 150 மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
டெரிசிப் மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |