Dexorange Syrup Uses in Tamil
டெக்ஸோரேஞ்ச் சிரப் இது ஒரு ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த சிரப் ஆகும். இந்த டெக்ஸோரேஞ்ச் சிரப்பில் இரும்புசத்து, வைட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலம் மூல பொருள்களாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இரும்பு சத்து குளுக்கனேட்டாகவும், வைட்டமின் பி12 சயனோகோபாலமினாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இது பெரிதும் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்காக பயன்படுகிறது. டெக்ஸோரேஞ்ச் சிரப் அறுவை சிகிச்சைக்கு பின் ஒருவருக்கு அறுவை சிகிச்சையில் இழந்த இரத்தத்தின் அளவை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த டெக்ஸோரேஞ்ச் சிரப் பற்றி அறிந்து கொள்வோம்.
Dexorange சிரப் நன்மைகள்
- டெக்ஸோரேஞ்ச் சிரப்பில் அமோனியம் சிட்ரேட்டின் இரும்பு சத்து குறைந்த உற்பத்தி திறன் கொண்ட ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி இரத்த சோகையை தடுக்கிறது.
- டெக்ஸோரேஞ்ச் சிரப்பில் வைட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலம் உள்ளது. இவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின் பி 12 உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் முழுவதுமாக பாதுகாக்கிறது.
- டெக்ஸோரேஞ்ச் சிரப்பில் இருக்கும் அமோனியம் சிட்ரேட் மற்றும் வைட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலம் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
- டெக்ஸோரேஞ்ச் சிரப்பில் இருக்கும் வைட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகின்றன.
Dexorange சிரப் பக்க விளைவுகள்
- குமட்டல்
- வாந்தி
- மலச்சிக்கல்
- வயிற்று போக்கு
- வயிற்று வலி
இந்த ஆரம்ப பக்க விளைவுகள் அதிகமாகும்ம் முன் மருத்துவரை அணுகுவது நல்லது. இதில் இருக்கும் பக்க விளைவுகள் தவிர வேறு ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நீங்கள் சிறு நீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளவராக இருந்தால் மருத்துவரை அணுகாமல் நீங்களாக இந்த டெக்ஸோரேஞ்ச் சிரப்பை எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி மருத்துவரே இந்த சிரப்பை பரிந்துரைத்தாலும் முன்கூட்டியே உங்கள் பாதிப்பை கூறுங்கள் அப்போது தான் அதற்கு ஏற்றாற்போல் அவர் மருந்து பரிந்துரைப்பார்.
நீங்கள் கர்ப்பமாகவோ அல்லது தாய்மார்களாகவோ இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்காமல் இந்த டெக்ஸோரேஞ்ச் சிரப்பை பயன்படுத்த கூடாது.
Dexorange மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |