Dexorange மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Dexorange Tablet Uses in Tamil

நமக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிவிட்டால் நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது மருந்துகள் தான். அதிலும் குறிப்பாக எந்த ஒரு மருந்தையும் மருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்களாகவே வாங்கி உட்கொள்வது. உங்களின் உடல் நலத்திற்கு அவ்வளவு பாதுகாப்பு இல்லை. அதனால் எந்த ஒரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மேலும் அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுமையாக அறிந்து கொண்ட பிறகு தான் அதனை பயன்படுத்த வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Dexorange மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Dexorange Tablet Uses in Tamil:

Dexorange Tablet Side Effects in Tamil

பொதுவாக இந்த Dexorange மருந்து இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை, , தோல் தொற்று, வைட்டமின் பி 12 குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடு, வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

இந்த மருந்து மாத்திரை மற்றும் டானிக் வடிவிலும் உள்ளது. பொதுவாக இந்த Dexorange மருந்தினை உணவுக்கு பிறகு உட்கொள்வது நன்மையை தரும். அதிலும் குறிப்பாக மருத்துவர் அளித்த அளவில் மட்டும் உட்கொள்ள வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

Dexorange Tablet Side Effects in Tamil:

  1. வயிற்றுப்போக்கு
  2. பசியின்மை 
  3. கருப்பு மலம்
  4. வாயில் கசப்பான சுவை
  5. குமட்டல்
  6. தொண்டை அழற்சி
  7. வயிற்று வலி
  8. நுரையீரல் வீக்கம்
  9. நெஞ்செரிச்சல்
  10. தோலில் அரிப்பு
  11. வழக்கத்திற்கு மாறான சோர்வு
  12. முழு உடல் வீக்கம்

போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படித்துப்பாருங்கள்=> Nodosis மாத்திரை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்றுகொள்ளுங்கள்.

அதிலும் குறிப்பாக இந்த Dexorange மருந்தினை பயன்படுத்தும் முன்பு மருத்துவரிடம் நீங்கள் தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் மருந்துகள் பற்றி தெரிவியுங்கள்.

மேலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் Dexorange மாத்திரையின் அளவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறிவிடும்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஜஸ்டின் 25மி.கி மாத்திரை பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement