Diazepam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

Diazepam Tablet Uses in Tamil

மருந்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதனை அதிகமாக உட்கொள்வதாலோ அல்லது அடிக்கடி உட்கொள்வதாலோ உடலில் பல பிரச்சனைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக, நம் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக தான் மருந்து உட்கொள்வோம். ஆனால், இவற்றை நாம் தவறாகவோ அல்லது அத்தியாமாகவோ எடுத்துக்கொண்டால் அம்மருந்தே நம் உடலிற்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, எந்தவொரு மருந்தை உட்கொள்வதற்கு முன்பும், மருந்தை எவ்வளவு உட்கொள்ள வேண்டும், இதனை உட்கொண்டால் நமக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா, உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொண்டு அதன் பிறகு தான் மருந்து உட்கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் Diazepam மாத்திரை எடுத்துக்கொள்ள போகிறீர்கள் என்றால், அம்மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பின்வருமாறு தெரிந்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

What are the Uses of Diazepam in Tamil:

 what are the side effects of diazepam in tamil

Diazepam மாத்திரை ஆனது, மன குழப்ப கவலை, மது விலக்கும் அறிகுறிகள் மற்றும் தடைப்பிடிப்பு ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும், இம்மருந்து சில நேரங்களில் வலிப்பு தாக்க நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பிற மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது.

எனவே இந்த மருந்து பெரும்பாலும், மனக்கவலை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

Norfloxacin மாத்திரை பற்றிய தகவல்..

பக்கவிளைவுகள்:

  • மலச்சிக்கல் 
  • குழப்பம் 
  • குமட்டல் 
  • இரட்டை பார்வை 
  • பசியின்மை 
  • அஜீரண கோளாறு 
  • வாய் உலர்ந்து போகுதல் 
  • சிறுநீர் குறைவாக வெளியேறுதல்

முன்னெச்சரிக்கை:

இம்மருந்தை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவரும் உட்கொள்ளக்கூடாது.

இம்மருந்தை உட்கொள்ளும்போது, வேறு எந்த மருந்தினையும் உட்கொள்ள கூடாது.

கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இம்மருந்தை உட்கொள்ளுதல் கூடாது.

ஓட்டுனர்கள் இம்மருந்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அழற்சி உள்ளவர்கள் இம்மருந்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Cobacyn od மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement