Diovol Tablet Uses in Tamil
மாத்திரை மருந்து என்றாலே அது உடலுக்கு நன்மைத்தரக்கூடியது என்றும், இதனை நம்முடைய உடலில் காணப்படும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு எடுத்துக்கொண்டால் உடல் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி பார்த்தால் இவை சற்று சரியாக இருந்தாலும் கூட அதில் சில பக்க விளைவுகளும் இருக்கிறது. அதாவது மருந்து மாத்திரைகள் எப்படி நமது உடலுக்கு நன்மையை அளிக்கிறதோ அதே அளவிற்கு அதில் சில பக்க விளைவுகளும் காணப்படுகிறது. ஆகவே எந்த மாத்திரையை நாம் எடுத்துக்கொண்டாலும் அதில் இருக்கும் பக்க விளைவுகளையும் தெரிந்து இருப்பது அவசியம். அதனால் இன்று Diovol என்ற மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Diovol மாத்திரையின் பயன்கள்:
- நெஞ்சு எரிச்சல்
- வயிற்றில் அமிலத்தன்மை
- வயிற்று வலி
- வயிறு புண்
- குடல் தண்ணீர் அதிகரித்தல்
- இதர வயிறு கோளாறு
மேலே சொல்லப்பட்டுள்ள நோய்கள் அனைத்திற்கும் இந்த மாத்திரை ஆனது பரிந்துரைசெய்யப்படுகிறது. மேலும் எந்த மாத்திரையாக இருந்தாலும் அதனை மருத்துவர் கூறிய அளவில் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும்.
Diovol Tablet Side Effects:
- உடலில் வீக்கம்
- தடித்தல் அல்லது அரிப்பு
- குமட்டல்
- வாந்தி
- மலச்சிக்கல்
- உடல் சோர்வு
- பசியின்மை
- குழப்பம்
- வயிற்று போக்கு
இத்தகைய பக்க விளைவுகள் உங்களுக்கு Diovol மாத்திரையினை எடுத்துக்கொண்ட பிறகு ஏற்பட்டால் அதனை அலட்சியபடித்தாமல் உடனே மருத்துவரிடம் கூறி சிகிச்சை பெற வேண்டும்.
யாருக்கெல்லாம் முன்னெச்சரிக்கை:
மது அருந்துபவர், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், இதயம் பிரச்சனை உள்ளவர்கள் என இவர் எல்லாம் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல் தற்போது உள்ள உடல்நிலை மற்றும் உணவு முறை பற்றி கூற வேண்டும்.
மேலும் இந்த மாத்திரையை ஏதேனும் ஒரு முறை எடுத்துக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அதையும் கூற வேண்டும்.
Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |