Disulfiram Tablet Uses in Tamil
இன்றைய சூழலில் நாம் வாழும் இந்த உலகம் தினமும் அதிக அளவு வளர்ச்சிகளை கண்டுகொண்டே இருக்கின்றது. அதேபோல் அப்படி வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்கின்ற பல வகையான முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி கொண்டே தான் உள்ளது. அதனால் இந்த உலகில் தினமும் ஒரு புதிய வகையான நோய்களும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. அப்படி ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது. எனவே நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும் மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை.
அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Disulfiram மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Risperidone மாத்திரை பற்றிய தகவல்
Disulfiram மாத்திரையின் பயன்கள்:
இந்த Disulfiram மாத்திரையானது மது தடுப்பான் மருந்து ஆகும். அதாவது இந்த மருந்தானது குடிப்பழக்கத்தை தடுத்து நிறுத்தி சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Disulfiram மாத்திரையின் பக்க விளைவுகள்:
Disulfiram மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- தலைவலி
- வாயில் கெட்ட சுவை
- மயக்கம்
- சிறுநீர் அடர்நிறமாகுதல்
- வலிப்புத்தாக்கங்கள்
- பலவீனம்
- பசியின்மை குறைதல்
- மனநிலை பிரச்சினைகள்
- வீக்கம்
- தோல் அரிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Okamet 500 மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
இந்த Disulfiram மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் கடுமையான இதய பிரச்சினைகள், மூளை பாதிப்பு மற்றும் நுரையீரல் நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கம் ஏற்படும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
வாழ்க்கை முறை:
- மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.
- இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது உடலானது சோர்வடையும், அதனால் நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். பழ ஜூஸ்களை எடுத்து கொள்ளுங்கள்.
- பருப்பு வகைகள், பீன்ஸ்,பி12 நிறைந்த உணவுகள், வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
- உங்களின் அன்றாட வாழ்க்கையில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
லோபெராமைட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |