டோலோபார் 650 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

Dolopar 650 Uses in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை சரியாக வைத்து கொள்வதற்கு மருந்து என்று ஒன்றை தனியாக எடுத்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் உட்கொண்ட உணவுகளே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்து இல்லாமல் ஒரு சிலர் உயிர்வாழ முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது. அதனால் நமது உயிரினை காக்கின்ற மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் அது நிமிடம் உள்ளதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமுமொரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் டோலோபார் 650 மி.கி மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

பாராசிட்டமால் 500 மிகி மாத்திரை பற்றிய தகவல்

Dolopar 650 Uses in Tamil:

Dolopar 650 Tablet Side Effects in Tamil

இந்த டோலோபார் 650 மி.கி மாத்திரையானது பொதுவாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியாக பயன்படுத்தபடுகிறது. அதாவது முதுகுவலி, தலைவலி, மூட்டுவலி, பல் வலி போன்ற உபாதைகள் வந்தால் வலியைத் குறைக்க பயன்படுகிறது.

அதேபோல் காய்ச்சலால் ஏற்படும் வலியையும் போக்க இந்த மருந்தானது பயன்படுகிறது. மேலும் புற்றுநோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கு அல்லது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் வலியை சமாளிக்க உதவும் வகையில் இந்த மருந்தானது பெரும்பாலும் அளிக்கப்படுகிறது.

இந்த டோலோபார் 650 மிகி மாத்திரை காய்ச்சல் மற்றும் வலிக்கான பொதுவான மருந்தளவு 325-650 மி.கி மாத்திரைகளாக 4 முதல் 6 மணி நேரங்கள் அல்லது 1000 மி.கி மாத்திரைகளாக ஒவ்வொரு 6 முதல் 8 மணிநேரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் பல மி.கி அளவு உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Dolopar 650 Tablet Side Effects in Tamil:

Dolopar 650 மி.கி மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • இரைப்பை புண்கள்
  • சோர்வு
  • இரத்த சோகை
  • குமட்டல்
  • காய்ச்சல்
  • அலர்ஜி 
  • வயிற்று வலி
  • வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Clavulanate மாத்திரை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த Dolopar 650 மி.கி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் தீவிரமான கல்லீரல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.

இந்த மருந்தினை பயன்படுத்தும் பொழுது மது அருந்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

செடிரிசின் சிரபின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement