Domstal மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Domstal Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மருந்துகள் தான் மிக மிக பயன்படுகிறது. அதாவது ஒரு சிலரின் வாழ்க்கையே மருந்துகளினால் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூட சொல்லலாம். ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் எல்லாம் அப்படி இல்லை. ஏனென்றால் அவர்களின் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை சரியாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவ்விரண்டும் மிக மிக மோசமான நிலையில் உள்ளது. அதனால் தான் அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல பிரச்சனை ஏற்படுகின்றது. நமக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனை ஏற்படும் பொழுதெல்லாம் தீர்வாக அமைவது மருந்துகள் தான். அப்படி உதவுகின்ற மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வது மிக மிக அவசியம். அதனால் தான் இன்று Domstal மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Esomeprazole மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

Domstal Tablet Uses in Tamil:

Domstal Tablet Side Effects in Tamil

பொதுவாக இந்த Domstal மாத்திரையானது இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றது மற்றும் பார்கின்சன் நோய்க்காக மருந்துகளை எடுத்துகொள்பவர்களுக்கு ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் போன்றவற்றை தடுக்க உதவுகின்றது.

இந்த மருந்து வயிற்றின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள தசைகளை இறுக்கியும், வெளியேறும் போது ஆசுவாசப் படுத்தியும் விடுகிறது. இதன் மூலம் நீங்கள் உட்கொள்ளும் உணவின் போக்கை உங்கள் வயிற்றிலிருந்து உங்கள் குடல் வரையும் வேகமாக செல்ல உதவுகிறது.

இதனால் குமட்டல் மற்றும் வாந்தி வருவது தடுக்கப்படுகிறது. இந்த Domstal மாத்திரையினை பொதுவாக உங்கள் உணவுக்கு 15-30 நிமிடங்களுக்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால், மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

டெல்மிசர்டன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

Domstal Tablet Side Effects in Tamil:

இந்த Domstal மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • சோர்வு
  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • உடலில் அரிப்பு
  • மார்பக வலி 
  • ஒழுங்கற்ற மாதவிடாய்
  • வலுவின்மை  
  • வாய் வறட்சி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த Domstal மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பொதுவாக இந்த மருந்தினை குழந்தைகளுக்கு அளிக்க கூடாது.

சிறுநீரக பாதிப்படைந்த நோய்யாளிகள் மற்றும் இதய நோய்யாளிகள் இதனை பயன்படுத்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Atenolol மாத்திரையை அதிக அளவு பயன்படுத்துபவரா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement