Doxinate Tablet uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பபட்டால் எடுத்து கொள்வது தான் மாத்திரை தான் .அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுவோம், அந்த மாத்திரை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்ற கேள்விகள் வர வேண்டும். மாத்திரை பின் புறம் பார்த்தாலும், முழுமையான தகவல் தெரிந்திருக்காது. ஏனென்றால் நாம் வாங்குவதே இரண்டு அல்லது மூன்று மாத்திரை தான். நீங்கள் போனில் மாத்திரையின் பெயரை மட்டும் போட்டாலே அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம், அதனின் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் doxinate மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்று தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு:- எந்த மருந்து மாத்திரையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
Doxinate Tablet uses in Tamil:
Doxinate 24 மாத்திரைகள் டாக்ஸிலமைன் மற்றும் வைட்டமின் B6 (Pyridoxine) இரண்டு மருந்துகளின் கலவையாகும். இந்த மாத்திரை கர்ப்ப காலத்தில் குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைக்காக பரிந்துரைக்கப்படுகிறது. இது கர்ப்பிணிப் பெண்களில் என்விபியை திறம்பட தடுக்கிறது மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்க டாக்சினேட் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
Doxinate Tablet Side Effects:
தூக்கம்
தலைவலி
வாயில் வறட்சி
மலசிக்கல்
முன்னெச்சரிக்கை:
இந்த மாத்திரையை கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் தானாக எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால் குழந்தைகளுக்கு மயக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
டாக்சினேட் மாத்திரை மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்படும். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
இரவு நேரத்தில் 1 மாத்திரையும், பிரச்சனை அதிகமானால் நோயாளியின் எடையை பொறுத்து காலையும், மாலையும் ஒரு மாத்திரை வழங்கப்படுகிறது.
மருத்துவர் கூறிய மருந்தின் அளவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம்.
மாத்திரை பயன்படுத்தும் முறை:
மருத்துவர் கூறிய நேரத்தில் உணவுக்கு முன்னோ அல்லது பின்னோ சாப்பிட வேண்டும்.
மாத்திரையை தண்ணீருடன் விழுங்கவும், மாத்திரையை உடைத்தோ, நசுக்கியோ மென்றோ சாப்பிட கூடாது.
Xirtam H Tablet 10 மாத்திரையின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வோம்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |