டாக்ஸிசைக்ளின் பயன்பாடு – Doxycycline Tablet Uses in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தினமும் ஒவ்வொரு வகையான மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து வருகிறோம், அதன் வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது டாக்ஸிசைக்ளின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தான். சரி இந்த டாக்ஸிசைக்ளின் மாத்திரை எந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. இந்த மாத்திரை நமது உடலில் எப்படி வேலை செய்கிறது. எந்த அளவில் இந்த மாத்திரையை பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை படித்தறியலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
டாக்ஸிசைக்ளின் மாத்திரையின் பயன்கள்:
டாக்ஸிசைக்ளின் மாத்திரை பொதுவாக முகப்பரு உள்ளிட்ட பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஆன்டி பயாடிக் மாத்திரை ஆகும். பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அத்தியாவசிய புரதங்களின் தொகுப்பைத் தடுப்பதன் மூலம் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கிறது..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மெத்தில்கோபாலமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
பக்கவிளைவுகள்:
- வாந்தி
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- தோல் அழற்சி
- மூச்சுவிடுவதில் சிரமம்
- பற்களில் நிறமாற்றம்
- பசியின்மை
பாக்டீரியா தொற்றுகளின் தீவிர நிலைகளில் மட்டுமே மருத்துவர்கள் Doxycyclineயை பரிந்துரைக்கலாம்.
மாத்திரை எடுத்துக்கொள்ளும் முறை:
வயிறு தொடர்பான பக்க விளைவுகள் இல்லை என்றால் இந்த மாத்திரையை உணவுடன் அல்லது நீர் ஆகாரத்துடன் எடுத்துக்கொள்ளவும்.
மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள் முழுவதும் மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளவும், Doxycycline மாத்திரைகள் எடுத்துக்கொண்ட அரை மணி நேரம் வரை உறங்க செல்வதை தவிர்க்கவும்.
தொண்டை எரிச்சல் ஏற்படாமல் இருக்க உட்கார்ந்த அல்லது நின்ற நிலையில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
கர்ப்பிணிகள், தாய்பாலூட்டும் பெண்கள் மற்றும் கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
Doxycycline மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் போது பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மாத்திரைகள் உட்கொண்டு இரண்டு மணி நேரம் கழித்து உணவுகளை சாப்பிடலாம்.
தீவிரமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும், இது பொதுவான பக்கவிளைவு தான் என்றாலும் தொடர்ச்சியாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Nefita மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |