வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Drez Oinment பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: July 15, 2025 5:46 PM
Follow Us:
Drez oinment payangal
---Advertisement---
Advertisement

Drez Ointment uses in Tamil

ட்ரெஸ் ஆயின்மென்ட் தோலில் ஏற்பட்ட காயங்களை ஆத்துவதற்காக  பயன்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது. இதில் மெட்ரோனிடசோல்  மற்றும் போவிடோன்  மூலப்பொருட்களாக சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக நம் தோலில் ஏற்பட்ட சின்ன சின்ன காயங்களுக்கு ஆயின்மென்ட் யூஸ் பண்ணுவோம். அந்த வகை ஆயின்மென்டில் ஒன்று தான் இந்த ஆயின்மென்ட். மேலும் இது க்ரீம் மற்றும் பவுடர் வடிவில் கிடைக்கின்றது. மேலும் ட்ரெஸ் ஆயின்மென்ட் பற்றி அறிந்து கொள்வோம்.

Drez Oinment பயன்கள்:

  • ட்ரெஸ் ஆயின்மென்ட் பொதுவாக தோலில் ஏற்பட்ட காயங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • இது சிறந்த ஆன்டிபயாக்டிக் ஆயின்மெண்டாக விளங்குகிறது. தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • அறுவை சிகிச்சை பிறகு ஏற்பட்ட காயங்களை சரி செய்வதற்கும் ட்ரெஸ் ஆயின்மென்ட் உதவுகிறது.
  • தோலில் ஏற்பட்ட வெட்டுக்கள் தீக்காயங்கள் பாக்டீரியாக்களால் மோசமடையும் விரைவில் காயம் குணமடைய உதவுகிறது.

Drez Oinment பக்க விளைவுகள் 

  • வீக்கம்
  • அரிப்பு
  • சிவத்தல்
  • கொப்பளங்கள்
  • வறண்ட தோல்
  • பயன்ப்படுத்தும் இடத்தில எரிச்சல்

மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் ஆனது தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

முன்னெச்செரிக்கை 

  • உங்களுக்கு இந்த ஆயின்மென்ட் ஆனது அலர்ஜி தரக்கூடியதாக இருந்தால் அதனை நீங்கள் பயன்படுத்த வேண்டாம். உங்கள் மருத்துவரிடம் இவற்றை கூறும்போது உங்களுக்கு ஏற்றாற்போல் அவர் மருந்து வழங்குவார்.
  • ட்ரெஸ் ஆயின்மென்டை உங்கள் கண் மூக்கு மற்றும்  வாயில் படாமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி பட்டுவிட்டால் உடனே தண்ணீரால் கழுவ வேண்டும்.
  • உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை மற்றும் தைராய்டு அல்லது ஹைப்பர் தைராய்டு இருந்தால் நீங்கள் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
  • நீங்கள் கர்ப்பமாகாவோ அல்லது தாய்ப்பால் கொடுப்பவராகவோ இருந்தால் இந்த மருந்தை பயன்படுத்துவதற்க்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
  • உங்களுக்கு வேறு ஏதேனும் ஆயின்மென்ட் பயன்படுத்தி அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதனை பற்றிய தகவலையும் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் Oinment மூடியில் கூம்பு போன்ற அமைப்பு உள்ளன ஏன் தெரியுமா..?

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now