Drotin மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Drotin Tablet Uses in Tamil

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் என்பது திருவள்ளுவர் வாக்கு. அதாவது நமது உணவுப்பழக்கம் சரியாக இருந்தால் நமக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே படாது என்பது தான் இதன் பொருள். இதற்கேற்ப நமது முன்னோர்கள் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை சரியாக வைத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே இல்லை. ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உடல்நல குறைபாடு ஏற்படுகிறது.

அதனால் அதனை சரிசெய்வதற்கு மருந்தினை நாடி செல்கின்றார்கள். அப்படி நாம் நமது உடலநலத்தை சரிசெய்வதற்கு பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் Drotin  மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Urimax மாத்திரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா

Drotin Tablet Uses in Tamil:

Drotin Tablet Side Effects in Tamil

இந்த Drotin மாத்திரையானது நமது வயிறு அல்லது இதயத்தில் உள்ள மென்மையான தசைகளில் ஏற்படும் பிடிப்புகளை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் இந்த மருந்தானது தலைவலி, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மாதவிடாய் காரணமாக ஏற்படும் வலியைப் போக்க பயன்படுகிறது.

மேலும் பிரசவத்தின்போது கர்ப்பப்பை வாய் பிடிப்பை போக்கவும் இது பயன்படுகிறது.  அதேபோல் இந்த மருந்தில் பல மி.லி அளவுகள் இருப்பதால் இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Drotin Tablet Side Effects in Tamil:

Drotin மாத்திரையை பயன்படுத்துவதால்,

  1. வயிற்று வலி
  2. கல்லீரல் வலி
  3. குமட்டல்
  4. வாந்தி
  5. மயக்கம்
  6. வாய் வறட்சி
  7. தூக்கக் கோளாறுகள்
  8. மலச்சிக்கல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

வெர்டின் 16 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

முன்னெச்சரிக்கை:

இந்த Drotin மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் கடுமையான இதயம் மற்றும் கல்லீரல் நோய்களினால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்தக்கூடாது.

அதேபோல்  தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Ramipril மாத்திரை பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement