Duphalac Syrup Uses in Tamil
இக்காலத்தில் உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் அதிகமாக பயன்படுத்துவது மருந்துகளை தான். உடலில் எவ்விதமான பிரச்சனை வந்தாலும் உடனே மருத்துவமனைக்கோ அல்லது அருகில் உள்ள மருந்தகத்திற்கோ சென்று உள்ள மாத்திரைகளையோ அல்லது சிரப்புகளையோ வாங்கி உட்கொள்வோம். அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எதற்க்காக பயன்படுகிறது.. இம்மருந்தினை உட்கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், இக்காலத்தில் வியாதி எங்கிருந்து வருகிறது என்றே தெரிவதில்லை. எனவே நீங்கள் duphalac சிரப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதன் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What is Duphalac Syrup Used For:
Duphalac சிரப் ஆனது, நாள்பட்ட அல்லது வழக்கமான மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், கல்லீரல் செயலிழப்பு காரணமாக ஏற்படும் அசாதாரண மூளை செயல்பாடு போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது.
இருப்பினும் இம்மருந்து அதிகமாக நாள்பட்ட மலசிக்கல் பிரச்சனைக்கு தான் பயன்படுத்தப்படுகிறது.
Tranexamic acid மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Duphalac Syrup Side Effects in Tamil:
Duphalac சிரப்பினை நீங்கள் எடுத்து கொள்ளும்போது பின்வரும் பிரச்சனைகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- குமட்டல்
- வயிற்று வலி
- வாந்தி
- வயிற்று போக்கு
முன்னெச்சரிக்கைகள்:
இம்மருந்தினை உட்கொள்ளும் முன் மருந்தவரின் ஆலோசை பெறுவது அவசியம். மேலும் முக்கியமாக கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் கருமையான வயிற்றுப்போக்கு உடையவர்கள் இம்மருந்தினை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளுதல் கூடாது.
இதுதவிர நீங்கள் வேறு ஏதேனும் மருந்தினை உட்கொண்டால் அதனை பற்றிய முழு விவரங்களையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் மற்ற மருந்துகளுடன் இம்மருந்தினையம் சேர்த்து உட்கொண்டால் அதற்கான பக்கவிளைவுகள் இன்னும் அதிகமாக காணப்படும்.
மொண்டேக் LC கிட் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |