Dydrogesterone Tablet Uses in Tamil
இன்றைய சூழலில் நாம் வாழும் இந்த உலகம் தினமும் அதிக அளவு வளர்ச்சிகளை கண்டுகொண்டே இருக்கின்றது. அதேபோல் அப்படி வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்கின்ற பல வகையான முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி கொண்டே தான் உள்ளது. அதனால் இந்த உலகில் தினமும் ஒரு புதிய வகையான நோய்களும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. அப்படி ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.
எனவே நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும் மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Dydrogesterone மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Levofloxacin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Dydrogesterone Tablet Uses in Tamil:
இந்த Dydrogesterone மாத்திரையானது என்பது புரோஜெஸ்ட்டிரோன் எனப்படும் உடல் ரீதியாக உற்பத்தி செய்யப்படும் இயற்கை ஹார்மோனுக்கு ஒரு செயற்கை மாற்றம் ஆகும். அதாவது இது ஒரு ஸ்டீராய்டு புரோஜெஸ்டின் ஆகும்.
மாதவிடாய் கோளாறுகள், கருச்சிதைவு, எண்டோமெட்ரியோசிஸ், கருவுறாமை போன்ற சிக்கல்களை போக்க இந்த மருந்து பயன்படுகிறது. பொதுவாக இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Dydrogesterone Tablet Side Effects in Tamil:
Dydrogesterone மாத்திரையை பயன்படுத்துவதால்,
- குமட்டல்
- எடை அதிகரிப்பு
- தலைவலி
- மார்பக வலி
- வயிற்று வலி
- தோல் அழற்சி
- பலவீனம்
- கல்லீரல் சிக்கல்கள்
- மஞ்சள் காமாலை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
எனலாபிரில் 2.5 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
இந்த Dydrogesterone மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
நீங்கள் கடுமையான யோனி இரத்தப்போக்கு, பக்கவாதம், முழுமையற்ற கருக்கலைப்பு, மார்பக புற்றுநோய், மூளை புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு மற்றும் ஹைபர்சென்சிட்டிவிட்டிபோன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்த கூடாது.
18 வயதிற்கு குறைவான குழந்தைகள் இந்த மருந்தினை பயன்படுத்த கூடாது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரையை இதற்கெல்லாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமாம்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |