வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எனலாபிரில் 2.5 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

Updated On: December 15, 2023 11:43 AM
Follow Us:
Enalapril Maleate 2.5 Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Enalapril Maleate 2.5 Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே அதற்கான தீர்வாக இருக்கும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனையினால் மருந்து உட்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்து பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்ட பிறகு உட்கொள்ளுங்கள்.

எனவே உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்டு வருங்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Enalapril Maleate 2.5 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்துப் பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரையை இதற்கெல்லாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமாம்

Enalapril Maleate 2.5 Tablet Uses in Tamil:

Enalapril Maleate 2.5 Tablet Side Effects in Tamil

 

இந்த Enalapril Maleate 2.5 மாத்திரை உயர் இரத்த அழுத்தம், கார்டியாக் பற்றாக்குறை, இதய செயலிழப்பு மற்றும் இடது கீழறை பிறழ்ச்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. . மேலும் இந்த மருந்தானது இதய செயலிழப்பிற்கு சிகிச்சை அளிக்கிறது.

இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.

மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Enalapril Maleate 2.5 Tablet Side Effects in Tamil:

Enalapril Maleate 2.5 மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  1. குறைந்த இரத்த அழுத்தம்
  2. அதிக உணர்திறன் விளைவுகள்
  3. முடி கொட்டுதல்
  4. அதிகரித்த இதயத்துடிப்பு
  5. சுவாச கோளாறு
  6. பசியின்மை
  7. அஜீரணம்
  8. உலர்ந்த வாய்
  9. மயக்கம்
  10. பலவீனம்
  11. தலைச்சுற்று
  12. தோல்அழற்சி
  13. வயிற்று போக்கு
  14. வாந்தி
  15. மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Antiflu மாத்திரையின் பயன் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

இந்த Enalapril Maleate 2.5 மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் நீரிழிவு அல்லது சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதை  தவிர்த்து கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

நைட்ரோசன் 10 மிகி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now