Enalapril Maleate Tablet Uses in Tamil
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்பது திருவள்ளுவர் வாக்கு. அதாவது நமது உணவுப்பழக்கம் சரியாக இருந்தால் நமக்கு மருந்து என்ற ஒன்று தேவை படைத்து என்பது தான் இதன் பொருள். இதற்கேற்ப நமது முன்னோர்கள் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை சரியாக வைத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே இல்லை. ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உடல்நல குறைபாடு ஏற்படுகிறது.
அதனால் அதனை சரிசெய்வதற்கு மருந்தினை நாடி செல்கின்றார்கள். அப்படி நாம் நாமத்து உடலநலத்தை சரிசெய்வதற்கு பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் Enalapril Maleate மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Ovabless மாத்திரையை அதிக அளவு பயன்படுத்துபரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க
Enalapril Maleate Tablet Uses in Tamil:
ஒரு ஆஞ்சியோடெண்டிசின் மாற்றும் நொதி (ACE) தடுப்பானான என்லாப்ரில் மாத்திரை ஹைப்பர்டென்ஷன் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
மேலும் வெண்ட்ரிக்கிள் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாதிரியானது தனியாகவோ அல்லது மற்ற மருந்துகளுடன் சேர்த்து பரிந்துரைக்கப்படுகிறது.
இதனை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
Ferrous Sulphate மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா
Enalapril Maleate Tablet Side Effects in Tamil:
இந்த Enalapril Maleate மாத்திரையை பயன்படுத்துவதால்,
- சோர்வு
- பலவீனம்
- தலைச்சுற்றல்
- இரத்த அழுத்தம் குறைதல்
- இருமல்
- இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிப்பது
- தூக்க கலக்கம்
- சிறுநீரக குறைபாடு
- வேகமான இதயத்துடிப்பு
- குளிர் காய்ச்சல்
- மஞ்சள் காமாலை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
முன்னெச்சரிக்கை:
இந்த Enalapril Maleate மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
சிறுநீரக நோயினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல் கல்லீரல் நோயினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Zincovit சொட்டுமருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |