எரித்ரோமைசின் மாத்திரை பயன்கள் மற்றும் அதன் பக்க விளைவுகள்..! Erythromycin Tablet Uses in Tamil
Erythromycin Tablet Uses in Tamil – எரித்ரோமைசின் என்றழைக்கப்படும் மருந்தை ஏன் உட்கொள்ள வேண்டும். எரித்ரோமைசின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும், இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சனைகள் ஏற்படும் என்பன பற்றி முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் இந்த பதிவின் வாயிலாக படித்தறியலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
எரித்ரோமைசின் மாத்திரை பயன்கள்:
எரித்ரோமைசின் மாத்திரை பல பாக்டீரியா தொற்றுகள் சிகிச்சைக்குப் பயன்படுகிறது. இதில் தோல் நோய்த்தொற்றுகள், சுவாசப்பாதை தொற்றுகள், க்ளமிடியா நோய்த்தொற்றுகள், சிஃபிலிஸ் மற்றும் இடுப்பு அழற்சி நோய் ஆகியவையும் அடங்கும். இந்த மருந்தை கர்ப்ப காலத்தில் உட்கொள்வதால், பிறக்கும் குழந்தைக்கு ஸ்ட்ரெப்டோகாக்கல் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Pyrigesic 650 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
மாத்திரையை எடுத்து கொள்ளும் முறை:
இந்த மருந்தை நரம்பு வழியாக அல்லது வாய்மூலமாகவும் கொடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி ஒரு குழந்தைக்கு இந்த மருந்து கொடுக்க வேண்டாம்.
எரித்ரோமைசின் (Erythromycin) வழக்கமாக ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் (ஒரு நாளைக்கு நான்கு முறை),
ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் (ஒரு நாளைக்கு மூன்று முறை) அல்லது
ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் (ஒரு நாளைக்கு இருமுறை) எடுத்துக்கொள்ளப்படுகிறது
பக்க விளைவுகள்:
இந்த மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று உப்புசம் ஆகியவை பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். கல்லீரல் பிரச்சனைகள், ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் நீடித்த QT போன்ற மிகவும் தீவிரமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
எச்சரிக்கை:
- சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய்,
- மைஸ்தீனியா கிராவிஸ்,
- குறைந்த பொட்டாசியம் அல்லது மெக்னீசியம் அளவு ஏற்றத்தாழ்வு
- நீண்ட QT நேர அறிகுறி ஏற்பட்டதற்கான வரலாறு
- ஒரு குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் தாய்மார்களாக இருந்தால்,
- இதய கோளாறுகளுக்கு மறுத்து மாத்திரைகள் எடுத்து கொண்டால்
எரித்ரோமைசின் (Erythromycin) மாத்திரை உங்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், கட்டாயமாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Dolopar மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |