வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Esomeprazole மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: December 11, 2025 5:24 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Esomeprazole Tablet Uses in Tamil

பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமு ஒரு மருந்து பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்தவகையில் இன்றைய பதிவில் Esomeprazole மாத்திரை பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

டெல்மிசர்டன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

Esomeprazole Tablet Uses in Tamil:

Esomeprazole Tablet Side Effects in Tamil

இந்த Esomeprazole மாத்திரையானது பொதுவாக உடலில் அமிலங்கள் அதிகம் உற்பத்தியாவதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றது. அதாவது அரிக்கும் ஈசோபாஜிடிஸ், இரையுறை நோய், ஹெலிக்கோபாக்டர் பைலோரி நோய்த்தொற்றுகள், சோழிங்கர்-எல்லிசன் நோய்க்குறி மற்றும் கணையம் அல்லது சிறுகுடல் பகுதியின் மேல் பகுதியில் ஏற்படும் கட்டிகள் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கின்றது.

மேலும் ஈஸோமெப்ரஸோல் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வயிற்றுப் புண் ஆகியவற்றிற்கும் சிகிச்சையாக அமைகிறது.

இது உங்கள் வயிற்றின் செல்களில் புரோட்டன் பம்பினைத் தடுக்கும். இந்த புரோட்டன் பம்ப் தடுக்கப்படும்போது, உங்கள் வயிற்றில் அமில உற்பத்தி குறைவாக இருக்கும். இந்த மருந்தானது பொதுவாக மாத்திரை வடிவிலும் திரவ சஸ்பென்ஷன் போன்ற வடிவத்தில் கிடைக்கும்.

அதேபோல் இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால், மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Atenolol மாத்திரையை அதிக அளவு பயன்படுத்துபவரா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

Esomeprazole Tablet Side Effects in Tamil:

  • இரைப்பை புண்கள்
  • வயிற்று புண்
  • தலைவலி
  • குமட்டல்
  • வயிற்றுப்போக்கு
  • மலச்சிக்கல்
  • வயிற்று வலி
  • முகப் பிரச்சனை
  • வாய் வறட்சி போன்ற பக்கவிளைவுகள் இந்த Esomeprazole மாத்திரையை பயன்படுத்துவதால் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த Esomeprazole மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

மாத்திரை எடுக்கும் முறை:

உங்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு மருத்துவர் மாத்திரையின் அளவுகளை பரிந்துரைப்பார். அதனால் இதனை மருத்துவர் என்ன அளவில் கூறினாரோ அதே அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். அது போல இந்த காபி அல்லது டீயுடன் விழுங்குவதை தவிர்க்க வேண்டும். தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். இந்த மாத்திரையினை நசுக்கியோ அல்லது கரைத்தோ சாப்பிட கூடாது.

வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும்:

  • உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் வெங்காயம், சிட்ரஸ் நிறைந்த பழங்கள், தக்காளி மற்றும் அதிக கொழுப்புள்ள உணவு மற்றும் காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • மது மற்றும் புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
  • தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை நடப்பதற்கு முயலுங்கள்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

நீங்க ஹைஃபெனாக் பி மாத்திரை அதிகமாக பயன்படுத்துபவரா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now