Etamsylate Tablet Uses in Tamil
பொதுவாக உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை எடுத்து கொண்டதும் உடல்நிலை சரியாகி விட்டால் நல்ல மாத்திரை உடனே சரியாகி விட்டது என்கிறோம். ஆனால் நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மை, தீமை இரண்டுமே அடங்கியுள்ளது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதவில் Etamsylate மாத்திரையின் நன்மை மற்றும் தீமை இரண்டுமே அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Etamsylate Tablet Uses:
Etamsylate மாத்திரையானது சிறு நாளங்களில் ஏற்படும் இரத்த கசிவு மற்றும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவுகிறது.
Etamsylate Tablet Side Effects:
- தலைவலி
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுவலி
- தோல் வெடிப்பு
- பலவீனம்
இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மூச்சுக்குழாய், அலர்ஜி போன்ற பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.
மாத்திரை எப்படி வேலை செய்கிறது:
Etamsylate மாத்திரியானது இரத்தத்தை உறைய செய்து இரத்த குழாய்களிருந்து இரத்த போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |