வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Etoricoxib மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

Updated On: July 1, 2025 6:39 PM
Follow Us:
etoricoxib tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Etoricoxib Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். ஆனால் நம் முன்னோர்களின் காலத்தில் பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள். இன்றைய காலத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளாமல் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்து கொள்கின்றனர். இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு மருந்து, மாத்திரைகளை தான் அதிகம் எடுத்து கொள்கின்றனர். இந்த மாத்திரைகளில் நன்மை மற்றும் தீமை இரண்டுமே உள்ளது. அதனை அறிந்து கொண்ட பிறகு தான் மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Etoricoxib மாத்திரையின் நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Etoricoxib Tablet Uses in Tamil:

etoricoxib tablet side effects in tamil

Etoricoxib மாத்திரையானது வலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது கீல்வாதம், முடக்கு வாதம், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் போன்ற பிரச்சனைகளில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கு பயன்படுத்தபடுகிறது.

Etoricoxib Tablet Side Effects:

  • வயிற்றுபோக்கு
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தலைவலி
  • தலைசுற்றல்
  • சுவாசிப்பதில் சிரமம்
  • வயிற்றுவலி
  • கை, கால் வீக்கம்
  • மலசிக்கல்
  • உயர் இரத்த அழுத்தம்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஜிங்க் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்..!

மாத்திரை எப்படி வேலை செய்கிறது.?

Etoricoxib என்பது COX-2 தடுப்பான்கள் எனப்படும் ஸ்டீராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து (NSAID) ஆகும். வலி மற்றும் வீக்கத்திற்கு (சிவப்பு மற்றும் வீக்கத்திற்கு) காரணமான சில இரசாயன தூதர்களின் வெளியீட்டைத் தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது.

இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. மருத்துவர் கூறிய அளவிலும், நேரத்தில் மட்டும் தான் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் இந்த மாத்திரையை காபி அல்லது டீயுடன் விழுங்க கூடாது. அதுமட்டுமில்லாமல் உடைத்தோ அல்லது கரைத்தோ சாப்பிட கூடாது. மருத்துவர் எப்படி கூறினாரோ அப்படி தான் எடுத்து கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரை சாப்பிடுவதால் மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம் அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Etoricoxib மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் அதிக தூக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களாக இருந்தாலும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now