Evion Lc Tablet Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளில் நன்மை மற்றும் தீமை என இரண்டுமே உள்ளது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்களாகவே மருந்து கடைக்கு சென்று மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை சாப்பிடும் போது தங்களின் உடல் எடைக்கு ஏற்ப மருந்தின் அளவுகளை பரிந்துரைப்பார்கள். இதனால் பக்க விளைவுகள் அந்த அளவிற்கு ஏற்படாது. இந்த பதிவில் Evion Lc மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் போன்றவற்றை அறிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Evion Lc Tablet Uses:
இந்த மாத்திரையானது தசை பிடிப்பு, கார்னைடைன் குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தபடுகிறது.
Evion Lc Tablet Side Effects:
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுவலி
மேலே சொல்லப்பட்ள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
மாத்திரை அளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
மேலும் தண்ணீரில் தான் மாத்திரையை விழுங்க வேண்டும், டீயுடனோ அல்லது காபியிடனோ மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.
முன்னெச்சரிக்கை:
இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |