Ferrous Sulphate மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Ferrous Sulphate Tablet Uses in Tamil

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்பது திருவள்ளுவர் வாக்கு. அதாவது நமது உணவுப்பழக்கம் சரியாக இருந்தால் நமக்கு மருந்து என்ற ஒன்று தேவை படைத்து என்பது தான் இதன் பொருள். இதற்கேற்ப நமது முன்னோர்கள் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை சரியாக வைத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே இல்லை. ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உடல்நல குறைபாடு ஏற்படுகிறது.

அதனால் அதனை சரிசெய்வதற்கு மருந்தினை நாடி செல்கின்றார்கள். அப்படி நாம் நாமத்து உடலநலத்தை சரிசெய்வதற்கு பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் Ferrous Sulphate மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Zincovit சொட்டுமருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா

Ferrous Sulphate Tablet Uses in Tamil:

Ferrous Sulphate Tablet Side Effects in Tamil

அதாவது இந்த Ferrous Sulphate மாத்திரையானது உடலில் இரும்புச் சத்து குறைந்த இரத்தத்தில் இரத்த சோகையால் அல்லது கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படுவது போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க பயன்படுத்தப்படும் இரும்புச் சத்து மாத்திரை ஆகும்.

இந்த மருந்தை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் அல்லது 2 மணி நேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்லது. வயிற்று வலி ஏற்பட்டால் , இந்த மருந்தை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Ferrous Sulphate Tablet Side Effects in Tamil:

இந்த Ferrous Sulphate மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • மலச்சிக்கல்
  • வயிற்றுப்போக்கு
  • வயிற்று வலி
  • வீக்கம்
  • மலம் கருப்பாக இருத்தல்
  • வாயில் கசப்பு சுவை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

ஜெரோடோல் MR மாத்திரையை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த Ferrous Sulphate மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்தமருந்தினை எடுத்து கொள்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன் அல்லது அதற்குப் பிறகு ஆன்டாசிட்கள், பால் பொருட்கள், தேநீர் அல்லது காபி ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை அதன் செயல்திறனைக் குறைக்கும்.

டெக்ஸா ஊசியின் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement