Ferrous Sulphate and Folic Acid Tablet பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு சல்பேட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Ferrous Sulphate With Folic Acid Tablet Uses in Tamil

வணக்கம் வாசகர்களே.. இன்று நாம் Ferrous Sulphate With Folic Acid மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தான் நாம் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் பயன்களை அறிந்துகொள்வது போல் அதனுடைய பக்க விளைவுகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஏன் என்றால் பொழுது தான் அந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது நம் உடலில் நிலைக்கு ஏற்றது எவ்வளவு அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எந்த அளவு சாப்பிட வேண்டும் என்ற விழ்ப்புணர்வு ஏற்படும். மருந்தின் அளவை அதிகமாக எடுத்துக்கொண்ட என்ன பக்க விளைவுகள் உண்டாகும் போன்ற தகவல்கள் நமக்கு தெரிய வரும். ஆக நாம் எந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் சரி அதனுடைய பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்துகொள்ளுங்கள். சரி வாங்க இன்றைய பதிவில் Ferrous Sulphate With Folic Acid மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறியலாம்.

ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு சல்பேட் மாத்திரை பயன்கள்:

  • கர்ப்ப காலத்தில்
  • இரத்த சோகை
  • ஃபோலிக் அமிலக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Lansoprazole மாத்திரை பற்றிய தகவல்..!

ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு சல்பேட் மாத்திரை பக்க விளைவுகள்

  • மலச்சிக்கல்
  • வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி
  • வீக்கம்
  • ஒவ்வாமை
  • மலம் கருப்பாக இருத்தல்
  • வாயில் கசப்பு சுவை

இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தற்காலிகமானது மட்டுமே. இந்த மருந்தை உங்கள் உடல் ஏற்றுக்கொண்ட பிறகு பாதிப்புகள் சரியாக்கலாம். இந்த மாத்திரைக்கான பக்க விளைவுகள் முழுமையான பட்டியல் அல்ல. மருந்துக்கு ஏதேனும் பாதகமான எதிர்வினை ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

மருந்தை எடுத்துக்கொள்ளும் முறை:

இந்த மருந்தை உணவருந்துவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் அல்லது 2 மணி நேரத்திற்கு பிறகு வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்லது . வயிற்று வலி உண்டானால், இந்த மருந்தை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மருந்திருந்திய 2 மணி நேரத்திற்கு முன் அல்லது அதற்குப் பிறகு ஆன்டாசிட்கள், பால் பொருட்கள், தேநீர் அல்லது காபி ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏன் என்றால் அவை மருந்தின் செயல்திறனைக் குறைத்துவிடும்.

எச்சரிக்கை:

இந்த மருந்துக்கு மிகவும் தீவிரமான ஒவ்வாமை எதிர்வினை அரிதானது. ஆயினும், சொறி, அரிப்பு / வீக்கம் (குறிப்பாக முகம் / நாக்கு / தொண்டை), கடுமையான தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிக்கல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tretinoin கிரீம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement