Festive Dee Optic Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்கும் உடல்நல குறைபாடு ஏற்படுவது இயல்பு தான். இந்த உடல்நல பிரச்சனைக்கு மருத்துவரை நாடி பிரச்சனைக்கான ஆலோசனையை கேட்கின்றோம். இதற்காக மருந்து, மாத்திரைகளை எழுதி தருகின்றனர். நாமும் நம்முடைய உடல்நல பிரச்சனை சரியாக வேண்டும் என்பதற்காக மருத்துவர் கொடுக்கின்ற மருந்து, மாத்திரைகளை சாப்பிடுகின்றோம்.
ஆனால் நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். இன்றைய பதிவில் Festive Dee Optic பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Festive Dee Optic Uses in Tamil:
Festive Dee Optic என்பது ஒரு சொட்டு மருந்தாக இருக்கிறது. இந்த சொட்டு மருந்து உங்களின் கண்கள் மற்றும் காதுகளில் ஏதும் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் மருந்தாக கொடுக்கப்படுகிறது.
வைரஸ் நோய், பூஞ்சை நோய், கண்ணின் காசநோய், சேதமடைந்த கண்ணின் மேற்பரப்பு, கார்னியாவில் புண்கள் இருந்தால் இந்த சொட்டு மருந்து மருந்தாக கொடுக்கப்படுகிறது.
பக்க விளைவுகள்:
- கண்கள் சிவத்தல்
- கண்களில் எரிச்சல் உணர்வு
- சுவையில் மாற்றம்
- மங்கலான பார்வை
- காது வலி
- கண்களில் அரிப்பு பிரச்சனை ஏற்படுதல்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் உங்களுக்கு தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் அதனை பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Zynol 150 மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த சொட்டு மருந்தை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த சொட்டு மருந்தை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த சொட்டு மருந்தை எடுத்து கொள்ளும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை மங்கலான பார்வையை ஏற்படுத்தும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலோ அல்லது சொட்டு மருந்து எடுத்து கொண்டாலோ அதனை பற்றிய முழு விவரத்தையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
இந்த சொட்டு மருந்தை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சொட்டு மருந்து எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |