Flavoxate Tablet Uses in Tamil
மனிதர்களின் வாழ்க்கையில் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாக சாப்பிட கூடாது. ஏனென்றால் மருத்துவர் ஆலோசனை படி சாப்பிடும் போது அவர்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு மருந்தின் அளவுகளை கூறுவார்கள். ஆனால் தாமாக மாத்திரை வாங்கி சாப்பிடும் போது பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படும். அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு வருகின்றோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Flavoxate Tablet Uses:
சிறுநீர்ப்பை அறிகுறிகளான வலி மிகுந்த சிறுநீர் கழித்தல், அடிக்கடி அல்லது அவசரமாக சிறுநீர் கழித்தல், இரவில் அதிக சிறுநீர் கழித்தல், சிறுநீர்ப்பை வலி மற்றும் அடங்காமை (சிறுநீர் கசிவு) போன்ற பிரச்சனைகளுக்கு ஃபிளாவோக்ஸேட் பயன்படுத்தப்படுகிறது
Flavoxate Tablet Side Effects:
- குமட்டல், வாந்தி
- வாய் வறட்சி
- தலைவலி
- தலைசுற்றல்
- மயக்கம்
- குழப்பமான மன நிலை அல்லது பதற்றம்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Co-trimoxazole மாத்திரைபயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
உங்களுக்கு இரத்த போக்கு அல்லது செரிமான பிரச்சனை ஏதும் இருந்தால் இந்த மாத்திரையை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்தாலும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் மயக்கத்தை அதிகப்படுத்தும்.
மேலும் Flavoxate மாத்திரையை எடுத்து கொள்ளும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
Lactare மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது.. அதன் பக்க விளைவுகள் பற்றி காண்போம்..
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |