போலிக் ஆசிட் மாத்திரை பயன்கள்.!

Advertisement

போலிக் ஆசிட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Folic Acid Tablet Uses in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய மருந்து பதிவில் ஃபோலிக் ஆசிட் மாத்திரை எதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்க்கலாம். பொதுவாக இந்த மாத்திரை கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஆகும் பெண்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன, என்ன தீமைகள் கிடைக்கின்றன என்பதை பற்றியெல்லாம் விரிவாக இந்த தொகுப்பில் படித்தறியலாம் வாங்க.

பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் நன்மையையும் இருக்கும் தீமையும் இருக்கும். அதாவது பயன்களும் இருக்கும் பக்கவிளைவுகளும் இருக்கும். ஆகையால், நாம் எந்தவொரு மருந்தினை எடுத்துக்கொள்ளும்போது, அம்மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

போலிக் ஆசிட் என்றால் என்ன?

  • ஃபோலிக் அமிலம் என்பது ஒரு வகையான வைட்டமின் பி சத்து ஆகும். இது உடம்பில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அவசியமானதாகும்.

போலிக் ஆசிட் பயன்கள் – Folic Acid Tablet Uses in Tamil:

  • போலிக் ஆசிட் மாத்திரையின் பயன்கள்: இந்த மாத்திரை மகப்பேறு அடைவதற்கும், மகப்பேறு அடைந்த பெண்களுக்கு கரு வளர்ச்சி நன்றாக இருப்பதற்கும் உதவுகிறது.
  • பெண்களுக்கு வைட்டமின் பி குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை பிரச்சனைகளுக்கும், மகப்பேறு பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
  • போலிக் ஆசிட் மாத்திரையில் வைட்டமின் பி சத்து அதிகமாக இருப்பதால் கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கும், பெண்களுக்கு உடம்பில் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதற்கும் போலிக் ஆசிட் மிகவும் முக்கியம்.
  • மாதவிடாய் சரியாக வராமல் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பின்பு இந்த மாத்திரையை பயன்படுத்தலாம். மாதவிடாய் சரியாக வருவதற்கும் இந்த மாத்திரை மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. மாதவிடாய் சரியான முறையில் வந்தால் தான் கருத்தரிக்க முடியும்.
  • போலிக் ஆசிட் கர்ப்பிணி பெண்கள் மட்டுமின்றி இரத்த சோகை உள்ளவர்களும் சாப்பிடலாம். உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு உதவுகிறது.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள்

போலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகள்:

  • Folic Acid Tablets Uses in Tamil: உடம்பில் போலிக் ஆசிட் அதிகரிப்பதற்கு மாத்திரைதான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை, உணவாகவும் சாப்பிடலாம். காய்கறிகள், பசலைக்கீரை, பீன்ஸ், ப்ரோக்கோலி, பப்பாளி, ஆரஞ்சு, ஈஸ்ட், முருங்கை கீரை, முளைக்கட்டிய பயறு, பச்சை பட்டாணி, வாழை, முழு தானியங்கள், ரொட்டி, பாஸ்தா, அரிசி, கறி போன்றவற்றில் அதிக அளவு போலிக் ஆசிட் உள்ளது.

போலிக் ஆசிட் மாத்திரை பக்க விளைவுகள் – Folic Acid Tablet Side Effects in Tamil:

  • காய்ச்சல், குமட்டல், வயிற்று வீக்கம், எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
  • மண சோர்வு, அலர்ஜி, உலர்ந்த வாய், தோல் சிவந்து போதல், தோல் அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
  • மேலே கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

போலிக் ஆசிட் மாத்திரை யார் சாப்பிடலாம்?

  • கர்ப்பிணி பெண்கள், மகப்பேறு அடைவதற்கு முயற்சிக்கும் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
  • இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போலிக் ஆசிட் மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்.
  • மருத்துவர் எந்த அளவு டோஸேஜ் உள்ள மாத்திரையை பரிந்துரை செய்கிறாரோ அந்த அளவு எடுத்து கொள்வது நல்லது.

போலிக் ஆசிட் மாத்திரை பயன்படுத்தும் முறை:

போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர் கூறிய அளவிலும் நேரத்திலும் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இல்லையென்றால் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement