Fourderm Cream Uses in Tamil
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொளவ்து மாத்திரை, மருந்து தான். அது போல முகம் மற்றும் தோல் பகுதிகளில் ஏதவாது அரிப்போ அல்லது பருவோ வந்தால் மருத்துவரிடம் சென்று காமிப்போம். அவர் அதற்கான மாத்திரை மற்றும் ஆயின்மென்ட் எழுதி கொடுப்பார்கள்.
இந்த ஆயின்மென்டை பயன்படுத்தும் போது பிரச்சனை சரியாகும். ஆனால் அதிலும் பக்க விளைவுகள் உள்ளன. அதனால் நீங்க எந்த மாதிரியான ஆயின்மென்ட் அல்லது கிரீம் பயன்படுத்தினாலும் அதில் உள்ள நன்மை மற்றும் தீமை என இரண்டையுமே அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Fourderm கிரீம் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Fourderm Cream Uses:
பாக்டீரியல் அல்லது பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் பல்வேறு தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சி பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
தோல் நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடைய அரிப்பு, சிவப்பு புண்கள், அரிப்பு மற்றும் சொறி போன்ற பிரச்சனைக்கு இந்த கிரீம் மருந்தாக உதவுகிறது.
Fourderm Cream Side Effects:
- எரிச்சல்
- அரிப்பு
- தோலின் நிறம் சிவத்தல்
- தோல் மெலிதல்
மேலே சொல்லப்பட்ள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த கிரீம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கிரீமை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.
நீங்கள் வேறு ஏதே பிரச்சனைக்கு கிரீம் ஏதும் பயன்படுத்தினால் அதனை பற்றிய தகவலை தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் வெறும் ஏதும் கிரீமை பயன்படுத்தி பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அதனை பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |