Furosemide மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன..?

Advertisement

Uses of Furosemide Tablet in Tamil

நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தனர். இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்கள் அனைத்தும் அவர்களின் முழு உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருந்தது. இதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவே அவர்களுக்கு மருந்தாக இருந்தது. ஆனால் இக்காலத்தில் உள்ள உணவுப்பொருட்கள் அனைத்தையும் நாம் பார்த்து பார்த்து உட்கொள்ளவேண்டியிருக்கிறது. எதில் என்னென்ன கலப்படம் இருக்கிறது என்பதே தெரிவதில்லை. அதேபோல் தான் நாம் உட்கொள்ளும் மருந்திலும் என்ன பக்கவிளைவு இருக்கிறது என்று நமக்கு தெரிவதில்லை. எனவே அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் மருந்து பதிவில் Furosemide மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Frusemide Tablet Uses in Tamil:

Uses of Furosemide Tablet in Tamil

Frusemide மாத்திரை ஆனது, உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை மற்றும் நீர்க்கட்டு சிகிச்சை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க முக்கிய மருந்தாக பயன்படுகிறது.

இந்த பயன்பாட்டை தவிர, கால் வீக்கம், சிறுநீர் தேக்கம் போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

ஆஃப்ளோக்ஸசின் கண் சொட்டு மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..

பக்க விளைவுகள்:

frusemide மாத்திரை ஒரு சிலருக்கு பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே பின்வரும் பக்கவிளைவுகளை உங்கள் உடலில் கவனித்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

  • மஞ்சள் காமாலை 
  • செவித்திறன் இழப்பு 
  • பசியின்மை 
  • குமட்டல் 
  • வயிற்றுப்போக்கு 
  • வாந்தி 
  • தசைப்பிடிப்பு 
  • மலச்சிக்கல் 
  • இரத்தசோகை 
  • தலைசுற்றல்

முன்னெச்சரிக்கை:

Frusemide மாத்திரையை உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள், இம்மருந்து உட்கொள்ளும் முறையை நன்கு கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி உட்கொள்ளவேண்டும். அப்படி இல்லாமல் நீங்களாகவே உட்கொண்டல் உடலில் ஆரோக்கியத்தில் பிரச்சனை உண்டாகக்கூடும்.

மேலும், கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இம்மருந்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவரின் அனுமதி பிறகே உட்கொள்ள வேண்டும்.

Avil மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement