Gaviscon Syrup Uses in Tamil
நம்முடைய உடம்பில் சளி மற்றும் இருமல் என இதுபோன்ற பிரச்சனைகள் காணப்பட்டால் அதனை சரி செய்ய உடனே நாம் மருந்துகளை வாங்கி தான் குடிக்கின்றோம். இவ்வாறு சிரப் வாங்கி குடிப்பதன் காரணமாக ஓரிரு நாட்களிலே இருமல் மற்றும் சளி பிரச்சனை ஆனது குணமாகிறது. இத்தகைய முறையில் பார்க்கும் போது எந்த ஒரு மருந்து நமது உடலுக்கு தேவையான நன்மைகளை அளித்தாலும் கூட இவை இல்லாமல் வேறு ஏதேனும் நன்மைகள் இருக்கிறதா என்றும், அதில் உள்ள பக்க விளைவுகள் என்ன என்றும் தெரிந்துகொள்வது அவசியம். ஆகையால் சிரப் என்று இல்லாமல் மாத்திரை மட்டும் ஆயின்மெண்ட் என அனைத்தினையும் இப்படி தான் பார்க்க வேண்டும். ஆகவே இன்று Gaviscon சிரப்பில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Gaviscon Syrup பயன்கள்:
- வயிறு பிரச்சனை
- அஜீரண கோளாறு
- நெஞ்சு எரிச்சல்
- வயிறு எரிவது போன்ற உணர்வு
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் இந்த சிரப் பயன்படும் ஒன்றாக இருக்கிறது.
மருந்தின் அளவு:
இத்தகைய சிரப்பினை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல், மருத்துவர் கூறிய அளவில் மட்டும்த தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அளவு கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரிப்பின் அளவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதன் பிறகு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் 2 வாரத்திற்கு மேல் இந்த சிரப்பை எடுத்துகொள்ள கூடாது.
Famotidine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Gaviscon Syrup Side Effects:
- குமட்டல்
- வாந்தி
- சிறுநீர் கழித்தலின் போது வலி
- வயிற்று போக்கு
- வயிறு வலி
- மலச்சிக்கல்
- அரிப்பு
- உடம்பில் படை
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் இந்த சிரப்பினை குடிப்பதன் காரணமாக வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் அதனை உடனே மருத்துவரிடம் கூற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
இந்த சிரப்பினை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் முன்பு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் மருத்துவர் உங்களுக்கு இதனை பரிந்துரை செய்யும் போது உங்களின் தற்போதைய நிலை பற்றி கூற வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |