Glibenclamide மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Glibenclamide Tablet Uses in Tamil

Glibenclamide Tablet Uses in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருத்துவ பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றோம். அப்படி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் சில சமையம் நமக்கு உடலில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் Glibenclamide மாத்திரை எதற்கு பயன்படுகிறது, அதன் எடுத்துக்கொள்ளும் போது சில சமையம் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

க்ளிபென்க்ளாமைடு மாத்திரை பயன்கள்:

வகை 2 நீரிழிவு சிகிச்சைக்காக Glibenclamide பயன்படுத்தப்படும். அதாவது இன்சுலின், உடல் இரத்தத்தில் சர்க்கரையை வளர்சிதை மாற்றம் செய்வதால் உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன். உடல் தேவையான அளவுகளில் இன்சுலினை உற்பத்தி செய்யாத போது, உடலில் இரத்தத்தின் சர்க்கரையின் அளவினை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஆக இந்த நீரிழிவு நோயை கட்டுப்படுத்த Glibenclamide மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆக உங்களுக்கு சொல்லப்பட்டுள்ள அளவின்படி இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Pulmoclear மாத்திரை பற்றிய தகவல்..!

மருந்து எப்படி வேலை செய்கிறது?

Glibenclamide இரத்த குளுக்கோஸைக் குறைப்பதற்காக கணையத்தினால் வெளியிடப்படும் இன்சுலின் அளவினை அதிகரிக்கிறது.

மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டியவர்கள்:

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதலை மேற்கொண்டிருந்தால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

குறிப்பு:

உலர்ந்த மற்றும் குளிர்ச்சியான இடத்தில் இந்த மருந்தை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறது. மருந்து நேரடியாக வெளிச்சத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Ambrolite S சிரப்பின் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பக்க விளைவுகள் – Glibenclamide Tablet Side Effects in Tamil:

குமட்டல், மலச்சிக்கல், குறைந்த ரத்த சர்க்கரை, எடை அதிகரிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சில பக்கவிளைவுகள் இந்த மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு அனுபவிக்கலாம். இந்த பக்க விளைவுகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து