What Is Glipizide Tablet
கிளிப்பிஸைட் (Glipizide) நீரிழிவுக்கான வாய்வழி மருந்தாக, கணையத்தை அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய தூண்டுவதன் மூலம் உங்கள் இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. வகை 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில், உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றுடன் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரையை பற்றி விரிவாக கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Glipizide Tablet Uses in Tamil:
வகை 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக இந்த மாத்திரை கொடுக்கப்படுகிறது.
Ovabless மாத்திரையை அதிக அளவு பயன்படுத்துபரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க
Glipizide Tablet Side Effects in Tamil:
- தலைவலி
- இரத்தச் சர்க்கரைக் குறைவு
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
- கடும் வயிற்று வலி
- தூக்க கலக்கம்
- பித்தத்தேக்க மஞ்சள் காமாலை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
முன்னெச்சரிக்கை:
இந்த Glipizide மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் இருந்தால், வயிற்றுப்போக்கு அல்லது குடல் அடைப்பு, அட்ரீனல் அல்லது பிட்யூட்டரி சுரப்பிகளில் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிர்ச்சனைகள் இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதனுடன் மது அருந்தும் போது சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.
உங்களுக்கு ஏதேனும் மாத்திரை எடுத்து கொண்டு அதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவர் கூறிய அளவிலும், நேரத்திலும் தான் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Ferrous Sulphate மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |














