Grenil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது | Grenil Tablet Uses in Tamil

Advertisement

Grenil Tablet Uses in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் உடலில் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை சரி செய்வதற்கு ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்ளாமல் மூலிகையை தான் எடுத்து கொண்டார்கள். இதனால் அவர்களுக்கு எந்த விதமான பக்க விளைவும் ஏற்படவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் உடலில் சின்ன பிரச்சனையாக இருந்தாலும், மருந்து, மாத்திரைகளை தான் எடுத்து கொள்கின்றனர்.

இதனால் உடலில் நீங்கள் பல விதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Grenil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!

Grenil Tablet Uses in Tamil:

இந்த மாத்திரையானது ஒற்றை தலைவலி பிரச்சனையை சரி செய்வதற்கு உதவுகிறது. மேலும் குமட்டல், வாந்தி, வலி ​​மற்றும் காய்ச்சலுடன் போன்ற பிரச்சனை மூலமாக வரும் தலைவலியை சரி செய்வதற்கும் உதவுகிறது.

பக்க விளைவுகள்:

grenil tablet side effects in tamil

  • இரத்த சோகை
  • மஞ்சள் காமாலை
  • உலர் வாய்
  • வயிற்று போக்கு
  • தூக்கம்
  • உடல்சோர்வு
  • தோல் வெடிப்பு

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை மேல் உள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

இந்த மாத்திரை சாப்பிடும் போது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Grenil மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement