Gudcef 200 Tablet Uses in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! நாம் இப்போது என்ன கால கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம் என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் துரித உணவுகளும், சுற்றுசூழல் மாசும், வாகன புகைகளும் தான் காணப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் யாருக்கு என்ன நோய் வரும் என்று சொல்லவே முடியாது. அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் உணவை மருந்தாக உண்டு நோய்களை குணப்படுத்தினார்கள். ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை உணவாக உண்டு வருகின்றோம். அந்த அளவிற்கு காலம் மாறிவிட்டது. அதுபோல நமக்கு ஏதாவது உடல்நல குறைபாடு என்றால், உடனே மருத்துவரை அணுகாமல், மருந்தகங்களில் கிடைக்கும் மருந்து மாத்திரைகளை வாங்கி உண்கின்றோம். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறான ஓன்று. இருந்தாலும் நம் பதிவின் மூலம் தினமும் ஒரு மாத்திரையின் பயன்கள் பற்றி கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று Gudcef மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Gudcef 200 Tablet – பயன்கள்:
Gudcef 200 மாத்திரை லேசான பாக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்த பயன்படுகிறது. இது பாக்டீரியா பரவுவதை நிறுத்த பயன்படுகிறது. உடலில் தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொல்லுகிறது.
இது மூளை, நுரையீரல் (நிமோனியா), காது, வயிறு, சிறுநீர் பாதை, எலும்புகள் மற்றும் மூட்டுகள், தோல், இரத்தம் மற்றும் இதயம், மூச்சுக்குழாய் அழற்சி, கொனோரியா (பால்வினை நோய்), காது, தொண்டை, அடிநாச்சதை மற்றும் சிறுநீர்ப் பாதை போன்றவற்றில் ஏற்படும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இது பாக்டீரியா தொற்றுக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறது.
மேலும் இந்த மாத்திரை காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு வேலை செய்யாது.
Ambrodil சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது
Gudcef 200 Tablet – பக்க விளைவுகள்:
- சொறி
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
இந்த மாத்திரை பெரும்பாலும் எந்தவொரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இருந்தும் மேல்காணும் பக்கவிளைவுகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
மாத்திரை பயன்படுத்தும் முறை:
இந்த Gudcef மாத்திரையை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை முழுவதுமாக விழுங்குங்கள். அதை மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம். குட்செஃப் 200 மாத்திரை உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
முன்னெச்சரிக்கை:
- சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் இந்த மாத்திரையை மருத்துவரின் அனுமதி இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டாம்.
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் முன் மருத்துவரை பரிந்துரைக்க வேண்டும்.
- மது அருந்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்கள் இந்த மாத்திரையை மருத்துவரின் அனுமதியோடு எடுத்து கொள்ளவும்.
Fentanyl இன்ஜெக்ஷன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |