Haem up சிரப்பின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்.!

Advertisement

Haem Up Syrup Uses in Tamil

பொதுவாக நமக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவரிடமோ அல்லது அருகில் உள்ள மருந்தகத்திற்கோ சென்று உடல்நிலை பிரச்சனையிற்கு ஏற்ற மருந்தினை வாங்கி உட்கொள்வோம். இந்த மருந்தினை சாப்பிட்டால் உடல்நிலை சரியாகிவிடும் என்று நினைப்போமே தவிர அம்மருந்தின் பயன்பாடுகளையும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் பற்றி நாம் அறிந்து கொள்வதில்லை. எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மருந்துகளின் பயன்களையும் பக்க விளைவுகளையும் நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் Haem up சிரப்பின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

குறிப்பு: எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாக உட்கொள்ளுதல் கூடாது.

அமோக்ஸிசிலின் மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

What is The Use of Haem Up Syrup Uses in Tamil:

What is The Use of Haem Up Syrup Uses in Tamil

ஹேம் அப் பிஎம் சிரப் என்பது CADILA PHARMA நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு சிரப் ஆகும். இது இரத்த சோகை, இரும்பு சத்து பிரச்சனைக்காக மருந்தாக கொடுக்கபடுகிறது.

ஹேம் அப் சிரப் பின்வரும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இது இரத்தசோகை நோய்க்கு தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

  • இரத்த சோகை
  • இரும்புச்சத்து குறைபாடு 
  • மைய நரம்பு மண்டலத்தில் மன அழுத்தம்
  • தோல் தொற்று
  • இருமல்
  • பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று
  • எலும்புப்புரை
  • கீல்வாதம்

Haem Up Syrup Side Effects in Tamil:

ஹேம் அப் சிரப் ஆனது ஒரு சிலருக்கு உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே ஹேம் அப் சிரப்பினால் ஏற்படும் பக்கவிளைவுகளை பின்வருமாறு காணலாம்.

  • வாந்தி
  • குமட்டல்
  • மயக்கம்
  • தலைவலி
  • வயிற்று வலி
  • கல்லீரல் சேதம்
  • வாய்ப்புண்கள்
  • வாய் கசப்பு
  • தொண்டைவலி

மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் தொடேன்ற்து இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருந்தளவு:

இந்த சிரப்பை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் அதனை சேர்த்து எடுத்து கூடாது. தண்ணீரில் தான் விழுங்க வேண்டும்.

 

சிட்ரல்கா சிரப் பயன்பாடுகள்

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும்  ஒவ்வாமை உள்ளவர்கள் ஆகியோர் மருத்துவரின் ஆலோசனை பெற்று இம்மருந்தினை உட்கொள்வது நல்லது.

உங்களுக்கு ஏதேனும் மாத்திரை, மருந்து எடுத்து கொண்டு அதன் மூலம் ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்பட்டிருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த சிரப் எடுத்து கொள்ளும் போது மயக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் இந்த சிரப் எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கொடுக்க கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement