Hcqs 200 Tablet Uses in Tamil
நம் முன்னோர்கள் அனைவரும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டார்கள் அதனால் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சிறு வயது குழந்தைகளுக்கே நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் தான். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது நேரத்திற்கு தூங்க வேண்டும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் நீங்கள் ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக எடுத்து கொள்ளும் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மைகள் போலவே தீமையும் அடங்கியிருக்கிறது. அதனால் தான் நீங்க சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அரிது கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Hcqs 200 மாத்திரையின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Hcqs 200 Tablet Uses in Tamil:
வகை 2 நீரிழிவு நோய், கடுமையான அல்லது நாள்பட்ட முடக்கு வாதம், டிஸ்லிபிடேமியா, சிஸ்டமிக் மற்றும் டிஸ்காய்டு லூபஸ் எரிதிமடோசஸ், பாலிமார்பஸ் லைட் வெடிப்பு மற்றும் மலேரியா போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Hcqs 200 Tablet Side Effects:
- பார்வை மங்கலாக தெரிவது
- வயிற்று வலி
- குமட்டல்
- வாந்தி
- பசியின்மை
- வயிற்றுபோக்கு
- அரிப்பு
- தோல் வீக்கம்
மேலே சொல்லப்பட்ள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
முன்னெச்சரிக்கை:
இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
தாய்ப்பால் குடோனுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசணை இல்லாமல் சாப்பிட கூடாது.
Hcqs 200 மாத்திரை எடுத்து கொள்ளும் போது பார்வை மங்கலாக தெரியும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Evion lc மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |