Hifenac-p Tablet Uses in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன. அதனால் அவற்றை சரிசெய்ய உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் இப்பொழுது உங்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்து பற்றிய தகவல்களை நீங்கள் நன்கு தெளிவாக அறிந்துகொண்ட பிறகு தான் அந்த மருந்தினை உட்கொள்வது நல்லது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஹைஃபெனாக் பி மாத்திரை ( Hifenac-p ) பற்றிய தகவல்களைத்தான் அறிந்துக்கொள்ளப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து ஹைஃபெனாக் பி மாத்திரை பற்றி நன்கு அறிந்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ஜெரோடோல் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Hifenac-p Tablet Uses in Tamil:
இந்த ஹைஃபெனாக் பி மருந்துதானது கீல்வாதம், முடக்கு வாதம் மற்றும் ஸ்போண்டிலிடிஸ் போன்ற வலிமிகுந்த வாதங்களுக்கு சிகிச்சை அளிக்கின்றது. அதாவது இந்த மருந்து வலியைக் குணப்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இது பொதுவாக சைக்ளோ-ஆக்ஸிஜனேஸ் என்சைம்களின் (COX) விளைவைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இந்த நொதிகள் பொதுவாக காயம் ஏற்படும் இடங்களில் இரசாயன புரோஸ்டாக்லாண்டின்களை உருவாக்குவதற்கு காரணமாகின்றது.
இது ஒரு ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து (NSAID) மருந்து ஆகும். இது பொதுவாக மாத்திரை வடிவில் கிடைக்கிறது இதனை உணவுடனோ அல்லது உணவில்லாமலோ எடுத்து கொள்ளலாம்.
அதேபோல் இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால், மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
Neurobion ஊசியை பயனப்டுத்துவதற்கு முன்னால் அதனை தெரிந்து கொள்ளுங்கள்
Hifenac-p Tablet Side Effects in Tamil:
- வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி
- குமட்டல்
- மலச்சிக்கல்
- வாந்தி
- தோல் தடிப்புகள்
- தோலில் அரிப்பு
- மூச்சு திணறல்
- தலைசுற்றல்
ஹைஃபெனாக் பி மாத்திரையை மேலே குறிப்பிட்டுள்ள பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படி உங்களுக்கு இந்த விளைவுகள் ஏதேனும் நீடித்தால் அல்லது மோசமாகிவிட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை:
இந்த ஹைஃபெனாக் பி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த மருந்தை கர்ப்ப காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பயன்படுத்தகூடாது.
மேலும் இந்த மருந்தினை குழந்தைகளுக்கு அளிக்க கூடாது.
அதேபோல் இந்த மருந்தினை உட்கொள்ளும் பொழுது மது அருந்துவதோ, புகைபிடிப்பதோ கூடாது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
க்ளோபிலெட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |