Ilaprazole Tablet Uses in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவாகிவிட்டது. சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்காக மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்கின்றனர். இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் நீங்க சாப்பிடும் மாத்திரைகளில் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையுமே அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ilaprazole மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Ilaprazole Tablet Uses in Tamil:

- அமிலத்தன்மை
- நெஞ்செரிச்சல்
- குடல் புண்
- வயிற்று புண்
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்காக இந்த மாத்திரை மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Ilaprazole Tablet Side Effects in Tamil:
- குமட்டல்
- தலைவலி
- மயக்கம்
- பலவீனம்
- காய்ச்சல்
- முதுகுவலி
- இருமல், தொண்டை வலி
- மலசிக்கல்
- வயிற்றுப்போக்கு
இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Co-trimoxazole மாத்திரைபயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் Ilaprazole மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
Ilaprazole மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துதல் கூடாது, ஏனென்றால் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாத்திரை எப்படி சாப்பிட வேண்டும்:
இந்த மாத்திரையை டீயுடனோ, காபியிடனோ சாப்பிட கூடாது. தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். அது போல மருத்துவர் கூறிய அளவில் தான் சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
வாழ்க்கை முறை:
- தண்ணீர் அதிகமாக குடியுங்கள்.
- காரமான உணவுகளை தவிர்த்திடுங்கள்.
- ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுங்கள்.
- அமிலம் கலந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.
- தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.
- எண்ணெயில் பொறித்த மற்றும் வறுத்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.
- கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Lactare மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது.. அதன் பக்க விளைவுகள் பற்றி காண்போம்..
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |














