இமோல் பிளஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா..?

Advertisement

Imol Plus Tablet Uses 

நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் இன்றைய கால சூழ்நிலை, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை என இவை அனைத்தும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அந்த வகையில் நமது உடலில் நன்றாக இருக்கும் போதே திடிரென்று உடல்நிலை சரியில்லாமல் போகும் நிலை என்பது ஏற்படுகிறது. இவ்வாறு உடல்நிலை சரியில்லை என்றால் நம்மில் பலர் மெடிக்கல் ஷாப்பில் தான் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இவ்வாறு சாப்பிடுவதினால் உடல் ஆரோக்கிய நிலைக்கு வந்தாலும் கூட அதில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி நன்றாக தெரிந்துக்கொள்வது நல்லது. எனவே இன்று இமோல் பிளஸ் என்ற மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Imol Plus மாத்திரை பயன்கள்:

 imol plus tablet side effects in tamil

Imol Plus மாத்திரை கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வினை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

  1. தலைவலி
  2. முதுகு வலி
  3. மூட்டு வலி
  4. தசைகளில் ஏற்படும் வலி
  5. முடக்கு வாதம்
  6. காய்ச்சல்
  7. உடல்பில் ஏற்படும் மற்ற அனைத்து விதமான வலிக்கும் கொடுக்கப்படுகிறது.

மருந்து எடுத்துக்கொள்ளும் முறை:

இந்த மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவிலும், தண்ணீருடனும் மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இல்லாமல் மாத்திரையின் அளவினை கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்ள கூடாது.

Flavoxate மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Imol Plus Tablet Side Effects:

  • நெஞ்சு எரிச்சல்
  • மலச்சிக்கல்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • வயிற்று போக்கு
  • உடல் அரிப்பு
  • வீக்கம்
  • தூக்கமின்மை
  • எரிச்சல்
  • நடுக்கம்
  • இரத்த சர்க்கரையின் அளவு குறைவு

மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இமோல் பிளஸ் மாத்திரைக்கு உரியதாக இருந்தாலும் கூட இவை இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதை உடனே மருத்துவரிடம் கூற வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

நமது உடலுக்கு மருந்து மாத்திரைகளை நன்மையினை அளித்தாலும் கூட சில மாத்திரையை நமது உடலுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்கக்கூடியதாக இருக்கும்.

அதனால் கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், இதய பிரச்சனை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் என இவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Co-trimoxazole மாத்திரைபயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement