Iron and Folic Acid எதற்காக பயன்படுத்தப்படுகிறது

Advertisement

Iron and Folic Acid Tablet Uses in Tamil

நாம் அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது தான் மாத்திரை தான். இந்த மாத்திரையில் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் அதனை அறிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. நம்முடைய பதிவில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் iron and folic acid மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: எந்த மாத்திரையையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாக எடுத்து கொள்ள கூடாது.

Iron and Folic Acid Tablet Uses:

 iron and folic acid tablet side effects in tamil

இன்றைய கால கட்டத்தில் யாரும் சரியாக உணவுகளை எடுத்து கொள்வதில்லை. அப்படியே எடுத்து கொண்டாலும் அதில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதில்லை. இதனால் பல நோய்கள் உடலில் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு மருந்து, மாத்திரைகளை தான் எடுத்து கொள்கின்றனர்.

Iron and Folic Acid இந்த மாத்திரையானது எதற்காக பயன்படுகிறது என்று தெரிந்து கொள்வோம். இந்த மாத்திரை ஆனது ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் அனீமியா, இரும்புசத்து குறைபாடு, வைட்டமின் பி9 குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

பக்க விளைவுகள்:

  • வீக்கம்
  • பசியிழப்பு
  • வறண்ட வாய்
  • வயிற்றுப்போக்கு
  • தோல் தடிப்புகள்
  • தலைவலி
  • தலைசுற்றல்
  • மன சோர்வு

மேல் கூறியுள்ள பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மேல் கூறியுள்ள பிரச்சனை இல்லாமல் வேறு ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த பக்க விளைவுகள் ஆனது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்கள்

முன்னெச்சரிக்கை:

  • இந்த மாத்திரை ஆனது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு 3 மாதங்கள் வரைக்கும் கொடுக்கப்படுகிறது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement