Itch Guard Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வோம். இந்த மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொள்ளும் போது நம்முடைய உடல் எடைக்கு தகுந்தது போல மாத்திரையின் அளவுகளை எழுதி தருவார்கள். அதனால் பக்க விளைவுகள் குறைவாக காணப்படும்.
அதுவே நீங்கள் மெடிக்களில் தானாக சென்று மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடும் போது உங்கள் உடல் எடைக்கு தகுந்தது போல மாத்திரையின் அளவுகளை எழுதி தர மாட்டார்கள். மேலும் நீங்கள் எடுத்து கொள்ளும் ஒவ்வொரு மாத்திரை, மருந்துகளிலும் உள்ள நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் itch guard ஆயிண்ட்மென்ட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Itch Guard Uses:
தோல் அரிப்பு, பருக்கள், அலர்ஜி போன்றவற்றிற்கு மாத்திரை மட்டுமில்ல்லாமல் ஆயிண்ட்மெண்டும் எழுதி தருவார்கள். இதில் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் அடங்கியிருக்கிறது, அதனால் அதனை அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
- பூஞ்சை தொற்று
- வாய்ப்புண்
- படர்தாமரை
- சேற்றுப்புண்
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைக்ளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
பக்க விளைவுகள்:
- தோல் எரிச்சல்
- கொப்பளம்
- வீக்கம்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தாலும் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
முன்னெச்சரிக்கை:
உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் ஆயிண்ட்மென்ட் எடுத்து கொண்டு அதனால் ஏதேனும் பக்க விளைவுகளை சந்திருந்தால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |