Lactic acid bacillus dry syrup uses in tamil
உணவே மருந்தே என்ற காலம் போகி, மருந்தே உணவே என்றாகிவிட்டது. நம் உடலில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, இயற்கை மருந்துகளை நாடாமல் ஆங்கில மருந்துகளை தான் எடுத்து கொள்கிறோம். சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மாத்திரை, மருந்துகளை தான் எடுத்து கொள்கிறார்கள். இதில் நன்மைகள் மட்டும் இருப்பதில்லை, தீமையும் இருக்கிறது.
மேலும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்வதோடு மட்டுமில்லாமல் சிரப்புக்களையும் எடுத்து கொள்கிறார்கள். நீங்கள் எந்த சிரப்பையும் எடுத்து கொள்வதற்கு முன்னர் அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Lactic acid bacillus dry syrup பயன்கள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
Lactic acid bacillus dry syrup uses:
- வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்வதற்கு உதவுகிறது.
- இந்த மருந்தானது வாயுவின் அளவை குறைக்க செய்கிறது. இதனால் வாயு பிரச்சனை குறையும்.
- வயிற்று வலி, வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
- உணவுக்குழாய் சம்மந்தப்ட்ட பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Lactic acid bacillus dry syrup side effects:
- குமட்டல்
- வயிற்று வலி
- தோலில் அரிப்பு, வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மேல் கூறியுள்ள பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.
பக்க விளைவுகளை தடுப்பது எப்படி.?
மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கும் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்னால் இயற்கை மருந்துகளை பயன்படுத்திய பிறகு சரியாகவில்லை என்றால் ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
குமட்டலை சரி செய்வதற்கு இஞ்சி டீ அல்லது இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம்.
வயிற்று வலியை சரி செய்வதற்கு சிறிது நேரம் நடக்க வேண்டும்.
மருந்தை பயன்படுத்தும் முறை:
சிரப்பை பயன்படுத்துவதற்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்க வேண்டும்.
அதன் பிறகு அளவு மூடியில் மருத்துவர் கூறிய அளவில் ஊற்ற வேண்டும்.
மருத்துவர் கூறிய அளவை விட கூடவோ, குறைவாகவோ குடிக்க கூடாது.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருப்பவராக இருந்தால் இந்த சிரப்பை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த சிரப்பை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
இந்த சிரப் எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |