Lactic Acid Bacillus Tablets Uses in Tamil
நாம் வாழும் இந்த கால கட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் வாகன புகைகளும், சுற்றுச்சூழல் மாசும் தான் காணப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் நமது உடலில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே நாம் மருத்துவரிடம் செல்லாமல், மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நாம் இப்படி செய்வது மிகவும் தவறு.
நம் உடலுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், நாம் முதலில் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தான் வாங்கி சாப்பிட வேண்டும். ஆகவே உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு மருந்திற்கான பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை கூறி வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக Lactic Acid Bacillus Tablets Uses in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
தடாலஃபில் (Tadalafil) மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம் தெரியுமா
Lactic Acid Bacillus Tablets – பயன்பாடுகள்:
பொதுவாக இந்த லாக்டிக் அமிலம் பேசிலஸ் (Lactic Acid Bacillus) மாதிரியானது வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த Lactic Acid Bacillus மாதிரியானது உங்கள் குடலில் உள்ள உடல் நட்பு பாக்டீரியாவை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும் தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அதுபோல இந்த Lactic Acid Bacillus எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.
ஒருவருக்கு வயிற்றுப்போக்கு இருந்தால் இந்த Lactic Acid Bacillus மாத்திரையை வாங்கி உட்கொள்ளலாம். அதாவது வயிற்றுப்போக்கு என்பது தளர்வான, தண்ணீருடன் கூடிய மலம் வழக்கத்தை விட அடிக்கடி வெளியேறுவது. அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் வயிற்றுப்போக்கு இருந்தால் இந்த Lactic Acid Bacillus மாத்திரை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
Lactic Acid Bacillus Tablets -பக்க விளைவுகள்:
இந்த Lactic Acid Bacillus எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை. இருப்பினும், நீங்கள் இந்த Lactic Acid Bacillus மாத்திரை உட்கொள்ளும் ஏதேனும் விரும்பத்தகாத விளைவுகளை சந்தித்தால் உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.
- வீக்கம்
- வாய்வு
மோனோரின் 150 Mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..
Lactic Acid Bacillus Tablets – உட்கொள்ளும் முறை:
- இந்த Lactic Acid Bacillus மாத்திரையை மருத்துவர் பரிந்துரைத்த அளவுகளில் உட்கொள்ள வேண்டும்.
- உங்கள் உடலில் இந்த மருந்தின் நிலையான அளவை பராமரிக்க ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- உங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை இருந்தால் லாக்டிக் அமில பேசிலஸ் மாத்திரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- Antibiotics மருந்து உட்கொண்ட பிறகு குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு முன் அல்லது பின் Lactic Acid Bacillus மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், லாக்டிக் அமிலம் பேசிலஸை Antibiotics மருந்துடன் சேர்த்து எடுத்துக் கொள்வது அவற்றின் செயல்திறனைக் குறைக்கும்.
Lactic Acid Bacillus Tablets – முன்னெச்சரிக்கை:
- மது அருந்துபவர்கள் Lactic Acid Bacillus மாத்திரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- கர்ப்ப காலத்தில் Lactic Acid Bacillus -ஐ எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் வளரும் கருவில் பக்க விளைவுகள் ஏற்படாது. இருந்தாலும் இந்த மருந்தை உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும்.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த மருந்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
Ebastine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |