லானோல் ER மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

Lanol ER Tablet Uses in Tamil

நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நாம் முதலில் செல்வது மருந்தகத்திற்கு தான். மருந்தகத்திற்கு சென்று நமக்கு என்ன செய்கிறது என்று சொல்லி மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இப்படி செய்வது தவறான ஓன்று. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் நமக்கு உடலில் ஏதும் பிரச்சனை என்றால் நாம் முதலில் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும். அவர் எழுதி தரும் மாத்திரையை தான் வாங்கி சாப்பிட வேண்டும்.

சரி நாம் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் போது அது எதற்கு சாப்பிட வேண்டும் என்று யோசித்து இருக்கிறீர்களா..? உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக மருந்துகள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று லானோல் ER மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..

லானோல் ER மாத்திரையின் பயன்கள்: 

இந்த லானோல் ER மாத்திரை வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குணப்படும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த லானோல் ER மாத்திரை தலைவலி, ஒற்றைத் தலைவலி, நரம்பு வலி, பல்வலி, தொண்டை வலி, மாதவிடாய் நேரத்தில் வலிகள், மூட்டுவலி, தசைவலி மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

இந்த மாத்திரை பொதுவான வலி நிவாரணியாக பயன்படுகிறது. இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையின் படி ஒழுங்காக எடுத்துக் கொள்ளப்பட்டால் அரிதாக எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Lanol ER Tablet Side Effects in Tamil:

Lanol ER Tablet Uses

இந்த மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

  1. குமட்டல்
  2. வயிற்று வலி
  3. வாந்தி
  4. வயிற்றில் புண்
  5. வாய் புண்
  6. தோலில் அரிப்பு
  7. சோர்வு
  8. அதிகமாக காய்ச்சல்

லானோல் ER மாத்திரையை நீங்கள் உட்கொள்ளும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Ascoril LS Syrup பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

லானோல் ER மாத்திரை பயன்படுத்தும் முறை: 

இந்த மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்த அளவு மற்றும் கால அளவுகளில் சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாத்திரையை முழுவதுமாக விழுங்க வேண்டும். அதை மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம். லானோல் ER மாத்திரையை உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கைகள்:

  1. கர்ப்பமாக இருக்கும் பெண்கள்
  2. தாய்ப்பால் கொடுப்பவர்கள்
  3. மது அருந்துபவர்கள்
  4. புகைபிடிப்பவர்கள்
  5. வாகனம் ஓட்டுபவர்கள்
  6. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள்

மேல்கூறியவர்கள் இந்த லானோல் ER மாத்திரையை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.

Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement