Lansoprazole Tablet Uses in Tamil
இன்றைய சூழலில் நாம் வாழும் இந்த உலகம் தினமும் அதிக அளவு வளர்ச்சிகளை கண்டுகொண்டே இருக்கின்றது. அதேபோல் அப்படி வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்கின்ற பல வகையான முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி கொண்டே தான் உள்ளது. அதனால் இந்த உலகில் தினமும் ஒரு புதிய வகையான நோய்களும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. அப்படி ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.
எனவே நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும் மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Lansoprazole மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Loratadine மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Lansoprazole Tablet Uses in Tamil:
இந்த Lansoprazole மாத்திரையானது பொதுவாக புரோட்டன் இறைப்பு தடுப்பான்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகை மருந்துகளின் தொகுப்பை சேர்ந்தது. இது பொதுவாக மருந்து இரைப்பையில் அமில உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் வேலை செய்யும்.
இது திறம்பட வயிற்று சுரப்புகளின் pH கட்டுப்படுத்தும் மற்றும் ஒரு திட-மருந்து சூத்திரங்களை விழுங்கமுடியாதவர்களுக்கு நரம்புவழி பாண்டோப்ரசோல் மாற்று மருந்தாக செயல்படுகிறது.
மேலும் இந்த மருந்தானது வயிறு மற்றும் குடல் புண், உணவுக் குழாயில் அழற்சி, மற்றும் இதர வயிறு சார்ந்த நிலைகளை சரிசெய்ய பயன்படுகிறது. இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.
Lansoprazole Tablet Side Effects in Tamil:
Lansoprazole மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- குமட்டல்
- வயிற்று வலி
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
- தலைவலி
- வலிப்பு
- சிறுநீரக கோளாறு
- ஓய்வின்மை
- உலர் வாய்
- தோல் அழற்சி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Dydrogesterone மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதனை தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
இந்த Lansoprazole மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
நீங்கள் பலத்த கல்லீரல் நோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்ள கூடாது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Levofloxacin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |