Lariago மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..! | Lariago Tablet Uses in Tamil

Advertisement

Lariago Tablet Uses in Tamil

வாழ்க்கை என்பது ஒருமுறை தான். இந்த வாழ்க்கையில் நமக்கு நன்மைகள்  தீமைகள் இரண்டும் கலந்து இருக்கும். அதுமட்டுமில்லாமல், பல போராட்டங்களும் இருக்கும். இவற்றை எல்லாம் எதிர்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை. முக்கியமாக, நாம் உண்ணும் உணவு பொருட்களே நமக்கு உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனை சரிசெய்து ஆரோக்கியமாக வாழ்வதே பெரிய வேலையாக இருக்கும். இதற்கும் மேலாக, உடல்நிலை சரியில்லை என்றும் நாம் உண்ணும் மருந்தே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதாக மாறுகிறது. எனவே, நம் உட்கொள்ளும்ஒவ்வொரு பொருளையும் ஆராய்ந்து அதன் நன்மைகள் என்ன.? தீமைகள் என்ன.? என்பதை அறிந்து அதன் பிறகு உட்கொள்வது நல்லது. எனவே, அந்த வகையில் நீங்கள் Lariago மாத்திரை எடுத்துக்கொள்ள போகிறீர்கள் என்றால் அதன் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Lariago Tablet Uses and Side Effects in Tamil:

பயன்கள்:

lariago மாத்திரை ஆனது, மலேரியா நோயை தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலேரியா எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது. மேலும், இம்மருந்து, குடலின் வெளிப்புறம் இருக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் லூபஸ் எரித்மாடோசஸ் மற்றும் கீல்வாத மூட்டழற்சி தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.

குடல் மற்றும் அமிபிக் கல்லீரல் கட்டி போன்ற ஒட்டுண்ணித் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.

Fentanyl இன்ஜெக்ஷன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது

பக்க விளைவுகள்:

  • குமட்டல்
  • கவலை
  • நுரையீரல் நோய்
  • தோல் அரிப்பு 
  • இதய பிரச்சனை
  • தசைப் பிரச்சனைகள்
  • வயிற்றுப்போக்கு
  • பசியின்மை
  • சரும தடிப்பு
  • பார்வை கோளாறு
  • குறைந்த ரத்த அணுக்கொண்ட நிலைகள்
  • தசை சேதம்
  • வலிப்பு
  • முடி கொட்டுதல் 

முன்னெச்சரிக்கை:

பார்வை கோளாறு அதாவது, பார்வை திறன் குறைவாக உடையவர்கள் இம்மருந்தை உட்கொள்ளுதல் கூடாது.

அழற்சி உள்ளவர்கள் இம்மருந்தை எடுத்துக்கொள்ளக்கூடாது.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இம்மருந்தை உட்கொள்ளுதல் கூடாது.

Diazepam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement