Lasilactone 50 Uses
பொதுவாக மருந்து மாத்திரைகள் என்பது நமது உடலுக்கு நன்மை தரக்கூடியதாக மட்டும் தான் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறு நாம் பார்த்தால் இது உண்மையானதாக இருந்தாலும் கூட நம் எடுத்துக்கொள்ளும் எதுவாக இருந்தாலும் அதற்கு என்று ஒரு அளவினை ஒதுக்கி விட வேண்டும். ஏனென்றால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு ஆகிவிடும் என்று ஒரு பழமொழியே இருக்கிறது. ஆகையால் நமது உடலுக்கு மருந்து மாத்திரைகள் என்பது ஒரு பக்கம் நமக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் கூட அதில் சில பக்க விளைவுகளும் காணப்படும். அதனால் எந்த மருந்து மாத்திரையாக இருந்தாலும் அதில் இருக்கும் பக்க விளைவுகளை தெரிந்துகொள்வது நல்லது. அந்த வகையில் இன்று Lasilactone 50 மாத்திரைக்கான பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
லேசிலாக்டோன் 50 மாத்திரையின் பயன்கள்:
Lasilactone 50 மாத்திரை ஆனது நமது உடலில் காணப்படும் உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுகிறது. இவ்வாறு இரத்த அழுத்தம் சரியாக இருப்பதனால் நமக்கு இதய ஆரோக்கியம், மாரடைப்பு வருவதை தடுக்க மற்றும் சிறுநீரக பிரச்சனை என இவற்றை எல்லாம் வராமல் தடுக்க முடியும்.
மருந்து எடுத்துக்கொள்ளும் முறை:
பொதுவாக நாம் எந்த மாத்திரையினை எடுத்துக்கொண்டாலும் கூட அதனை நசுக்கியோ அல்லது டீ மற்றும் காபியுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதை தவிர்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே Lasilactone 50 மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவில் மட்டும் தான் தண்ணீருடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
Rifaximin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Side Effects of Lasilactone 50:
- நீர்சத்து குறைபாடு
- இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு
- அதிகமாக சிறுநீர் கழித்தல்
- தலைவலி
- தூக்கமின்மை
- குறைந்த இரத்த அழுத்தம்
- தோல்களில் அலர்ஜி
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் Lasilactone 50 மாத்திரையின் பக்க விளைவுகளாக இருந்தாலும் கூட இந்த பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் உங்களுக்கு தோன்றினால் அதனை தாமதப்படுத்தாமல் மருத்துவரிடம் கூறுவது நல்லது.
யாருக்கு முன்னெச்சரிக்கை:
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என இவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஆகவே மருத்துவர் உங்களுக்கு Lasilactone 50 மாத்திரையினை மருத்துவர் பரிந்துரை செய்தால் தற்போது உங்களின் நிலைமை பற்றியும், உணவு முறை பற்றியும் தெளிவாக கூற வேண்டும்.
Co-trimoxazole மாத்திரைபயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |