Lasix 40 Mg Tablet Uses in Tamil
நாம் அனைவருமே இன்றைய நிலையில் நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நாம் முதலில் செல்வது மருந்தகத்திற்கு தான். மருந்தகம் சென்று நமக்கு செய்யும் பிரச்சனையை கூறி மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறான ஓன்று. நமது உடலில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும். பின் அவர் எழுதி தரும் மருந்து மாத்திரைகளை தான் வாங்கி சாப்பிட வேண்டும்.
அதுபோல நீங்கள் தானாக மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிடும் போது இந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம் என்று யோசித்திருக்கிறீர்களா..? உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் மாத்திரைகளின் பயன்பாடுகள் மற்றும் பக்கவிளைவுகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Bandy Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! |
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Lasix 40 Mg Tablet Uses in Tamil:
லாசிக்ஸ் 40 Mg மாத்திரை உங்கள் உடல் அதிக உப்பை உறிஞ்சுவதிலிருந்து தடுக்கிறது. மற்றும் அதற்கு பதிலாக உப்பை உங்கள் சிறுநீரில் வெளியேற்ற அனுமதிக்கிறது. மேலும் இது அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றவும் உதவுகிறது.
இந்த மாத்திரை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உங்கள் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது, உங்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு. இந்த மாத்திரை இதய செயலிழப்பு, கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு உடலில் அதிகப்படியான நீரால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது பயன்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Nefita மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
லாசிக்ஸ் 40 Mg மாத்திரையின் பக்கவிளைவுகள்:
- நீரிழப்பு
- இரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவது
- இரத்தத்தில் மெக்னீசியம் அளவு குறைவது
- இரத்த அழுத்தம் குறைவு
- எலக்ட்ரோலைட் சமநிலையின்மை
- இரத்தத்தில் சோடியம் அளவு குறைவு
லாசிக்ஸ் 40 Mg மாத்திரையை நீங்கள் பயன்படுத்தும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிக்சை பெற்று கொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Metformin 500 mg மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
லாசிக்ஸ் 40 Mg மாத்திரையை எப்படி பயன்படுத்துவது..?
இந்த மாத்திரையை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்த அளவு மற்றும் கால அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரையை முழுவதுமாக விழுங்க வேண்டும். அதை மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. லாசிக்ஸ் மாத்திரை உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பிணி பெண்கள்
- பால்கொடுக்கும் தாய்மார்கள்
- வாகனம் ஓட்டுபவர்கள்
- மது அருந்துவது
- கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள்
மேல்கூறியவர்கள் இந்த லாசிக்ஸ் 40 Mg மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்த கூடாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Gutrex D 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |