Levetiracetam மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

Advertisement

Levetiracetam Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் உடனேஎடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளில் நன்மை, தீமை இரண்டுமே அடங்கியுள்ளது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் உள்ள நன்மை மற்றும் தீமை இரண்டையுமே அறிந்து கொண்டு சாப்பிடுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் Levetiracetam மாத்திரையின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Levetiracetam Tablet Uses in Tamil:

 levetiracetam tablet side effects in tamil

வலிப்பு பிரச்சனைகளுக்கு இந்த மாத்திரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

Levetiracetam Tablet Side Effects:

  • தூக்கம்
  • தலைவலி
  • உடல் சோர்வு
  • பலவீனம்
  • வாந்தி
  • நடுக்கம்
  • தோலின் நிறம் மாற்றம் அடையும்
  • உடல்வலி

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்து எப்படி வேலை செய்கிறது:

Levetiracetam ஒரு வலிப்பு மருந்து. நரம்பு செல்களின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தளங்களில் (SV2A) இணைப்பதன் மூலம் இது செயல்படுகிறது. இது மூளையில் உள்ள நரம்பு செல்களின் அசாதாரண செயல்பாட்டை அடக்குகிறது மற்றும் வலிப்புத்தாக்கங்களை ஏற்படுத்தும் மின் சமிக்ஞைகள் பரவுவதைத் தடுக்கிறது.

முன்னெச்சரிக்கை:

உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

இந்த மாத்திரை சாப்பிடும் போது உடல் சோர்வு ஏற்படும், அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Levetiracetam மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் தூக்கம் மற்றும் உடல் சோர்வை அதிகப்படுத்தலாம்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகள் ஏதும் எடுத்து கொண்டால் அதனை பற்றி முழுமையாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Famotidine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

 

Advertisement