Levocetirizine 5 mg Tablet Uses
உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கி சாப்பிடுவோம். மருத்துவர் எழுதி கொடுத்த மாத்திரையாக இருந்தாலும் அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம் என்று அறிந்து கொள்ள வேண்டும். எப்படி அறிந்து கொள்வது என்று யோசிப்பீர்கள். இன்றைய காலத்தில் உலகமே போனாக உள்ளது. அந்த போனில் Google-லில் மாத்திரையின் பெயரை மட்டும் போட்டு Search செய்தால் அந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் போன்ற முழுவிவரத்தையும் கொடுத்து விடும். முக்கியமாக மருத்துவர் மாத்திரை எழுதி கொடுக்காமல் தாமாக சென்று மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இன்றைய பதிவில் Levocetirizine 5 mg பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு:- எந்த மருந்து மாத்திரையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
Levocetirizine 5 mg Tablet Uses in Tamil:
- Levocetirizine 5 mg மாத்திரை ஒவ்வாமை, சளி , மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல் ஆகியவற்றைப் சரி செய்ய மருந்தாக பயன்படுகிறது.
- இது தோல் ஒவ்வாமை மற்றும் பூச்சி கடித்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் அரிப்புகளை குறைக்க உதவுகிறது.
Levocetirizine 5 mg Side Effects in Tamil:
- தலைவலி
- உடல் சோர்வு
- மயக்கம்
- வயிற்று வலி
- வாய் வறட்சி
ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாராக இருந்தால் இந்த மாத்திரை எடுத்து கொளவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் தாய்மார்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தலாம். அல்லது பாலின் அளவை குறைக்க செய்யும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை எடுத்து கொண்டால் அதை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Xirtam H Tablet 10 மாத்திரையின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வோம்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |