லெவோசெடிரிசைன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

Levocetirizine Tablet Uses in Tamil

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்பது திருவள்ளுவர் வாக்கு. அதாவது நமது உணவுப்பழக்கம் சரியாக இருந்தால் நமக்கு மருந்து என்ற ஒன்று தேவை படைத்து என்பது தான் இதன் பொருள். இதற்கேற்ப நமது முன்னோர்கள் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை சரியாக வைத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே இல்லை. ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அதனால் அதனை சரிசெய்வதற்கு மருந்தினை நாடி செல்கின்றார்கள். அப்படி நாம் நமது உடலநலத்தை சரிசெய்வதற்கு பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் Levocetirizine மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.. 

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

சிஃப்ரான் 500 மிகி மாத்திரை பற்றிய தகவல்

Levocetirizine Tablet Uses in Tamil:

Levocetirizine Tablet Side Effects in Tamil

இந்த Levocetirizine மாத்திரையானது ஆன்டிஹிஸ்டமைன் எனப்படும் மருந்து குழுவை சேர்ந்தது. இது பொதுவாக மூக்கு ஒழுகுதல், அரிப்பு அல்லது நீர்த்த கண்கள், தும்மல், போன்ற பொதுவாக வருடம் முழுவதும் ஏற்படும் அதே போல் பருவ கால ஒவ்வாமைகளாக நிகழக்கூடிய அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றது.

மேலும் இந்த மருந்தை, படை நோய் காரணமாக ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெறவும் பயன்படுத்தலாம். அதேபோல் இந்த மருந்தானது நமக்கு ஏற்பட்டுள்ள எதிர்வினை உடலில் உருவாக்கும் ஹிஸ்டமைனை தடுப்பதன் மூலம் வேலை செய்கின்றது.

இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Levocetirizine Tablet Side Effects in Tamil:

இந்த Levocetirizine மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • தூக்கம்
  • சோர்வு
  • சைனஸ் வலி
  • காது தொற்று
  • இருமல்
  • காய்ச்சல்
  • மூக்கில் இரத்தம் வடிதல்
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • மலச்சிக்கல்
  • உலர்ந்த வாய் 
  • எடை அதிகரிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

ஜிங்க் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த Levocetirizine மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ள வேண்டும்.

மேலும் நீங்கள் கர்ப்பமாகவோ மற்றும் தாய்பால் அளிக்கின்ற தாய் என்றாலும் இந்த மருந்தினை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Livogen xt மாத்திரை பற்றிய தகவல்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement